Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணைகளுக்காக இன்று நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சரத் பொன்சேகாவை மர்ம வாலிபர்கள் குழுவொன்று சூழ்ந்து கொள்ள முற்பட்டமை குறித்து பல்வேறு தரப்புகளிலிருந்தும் பலத்த சந்தேகங்கள் கிளப்பப்பட்டுள்ளன.

குறித்த மர்ம வாலிபர்கள் குழு சரத் பொன்சேகா நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட போதும், நீதிமன்றத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டபோதும் அவரைச் சமீபிக்க முயன்றார்கள். ஆயினும் அவர்களின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பொன்சேகாவின் ஆதரவாளர்கள் மர்ம வாலிபர்களை சரத் பொன்சேகாவின் அருகில் நெருங்க விடாத வண்ணம் பலத்த ஆட்சேபத்தை வெளிக்காட்டினர்.

அது மாத்திரமன்றி காதில் கடுக்கணும், கைகளில் வளையல் போன்றவையும் அணிந்துஒருவிததோற்றத்துடன் காட்சியளித்த பிரஸ்தாப வாலிபர்கள் குழு ஊடகவியலாளர்களின் கடமைக்கும் இடைஞ்சல் விளைவித்துள்ளார்கள்.

ஊடகவியலாளர்கள் சரத் பொன்சேகாவை நெருங்க முற்பட்ட சமயங்களில் எல்லாம் மர்ம வாலிபர்கள் குழு வழியை அடைத்துக் கொண்டு நின்றதுடன், தங்களைத் தவிர யாரும் சரத் பொன்சேகாவை அணுகாத வண்ணம் பார்த்துக் கொண்டார்கள்.

அவர்களின் நடத்தையில் பலத்த சந்தேகம் கொண்ட சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் வாலிபர்கள் குழு தொடர்பில் அங்கு காவலில் இருந்த பொலிசாரிடம் முறையிட்ட போதும், பொலிசார் அந்த வாலிபர்களின் ஆளடையாளத்தை பரிசோதிக்கக்கூட முன்வரவில்லை. அது மாத்திரமன்றி அந்த வாலிபர்களும் பொலிசாரைக் கண்டு அச்சப்படவே இல்லை.

ஆயினும் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களிடமிருந்து மர்ம வாலிபர்கள் தொடர்பில் வெளிப்பட்ட எதிர்ப்பு வலுவடையவே, பொலிசார் ஏதோ சைகை செய்ய அந்த வாலிபர்கள் குழு நொடியில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து மாயமாக மறைந்து விட்டதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தமிழ்வின்னுக்குத் தெரிவித்துள்ளார்.

பிரஸ்தாப சம்பவம் தொடர்பில் சரத் பொன்சேகா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்கவை தொடர்பு கொண்டபோது, “நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற போதிலும் எங்களைக் கூட உடம்பு வரை பரிசோதித்த பின்பே சரத் பொன்சேகாவின் அருகில் செல்ல அனுமதிக்கின்றனர். ஆயினும் இன்று அந்த மர்ம வாலிபர்கள் தொடர்பில் பொலிசார் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது அசிரத்தையாகச் செயற்பட்டனர்.

சரத் பொன்சேகாவின் பாதுகாப்புக்கு பலத்த அச்சுறுத்தல் நிலவும் நிலையில் இப்படியான சம்பவங்கள் அரசாங்கத்தின் உதவியுடன் அவரைப் படுகொலை செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எங்களுக்குள் உள்ளது.

ஏனெனில் வழக்கின் அரச தரப்பு சாட்சியான சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரெட்ரிக்கா ஜோன்சுக்கு தற்போதைக்கு ஐந்து பேரைக் கொண்ட பாதுகாப்புக்கு மேலதிகமாக டிபெண்டர் வாகனமொன்றும் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் சரத் பொன்சேகாவின் பாதுகாப்புக்கு ஆயுதம் தாங்கிய ஒருவர் கூட கடமையில் அமர்த்தப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to பொன்சேகாவை நெருங்கிய மர்ம வாலிபர்கள்: கொலை முயற்சி என்கிறார் அர்ஜுன ரணதுங்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com