Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த நான்கு நாட்களாக பிரித்தானியாவில் தமிழர்களால் தொடரப்பட்டுவரும் போர்வீரர்களை நினைவுகூரும்ஹாட் டு ஹாட் வோக்நடைபயணத்தில் ஐந்தாவது நாளான இன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களும், பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்களும் இணைந்து நடந்துவருகின்றனர்.

ஐந்தாவது நாளில் எழுச்சி கொண்டுள்ள இந்த நடைபயணத்தை இன்று காலை 9:00 மணிக்கு லூட்டனில் அப்பகுதி மேஜர் கிஸ் வோர்ஸிப் (HIS WORSHIP) அவர்களும், கவுன்ஸிலர் ரொம் ஸோ (TOM SHAW) அவர்களும் மெழுகுவர்த்தி ஏற்றி அகவணக்கம் செலுத்தலுடன் நடைபயணத்தில் பங்குகொள்ளும் அனைவரையும் வாழ்த்தி வழியனுப்பிவைத்தார். இந்த ஆரம்ப நிகழ்வில் றோயல் அங்கிலிக்கன் றெஜினெண்ட் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி திரு. பேர்ட்டன் (MR. BURTON – X Royal Angian Regiment) அவர்களும் உட்பட அப்பகுதி வாழ் பல்லின மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் சிறப்பு விடயமாக நடைபயணத்தை மேற்கொள்ளும் நபர்களை வாழ்த்தி மதிப்பிற்குரிய லூட்டன் மேயர் கிஸ் வோர்ஸிப் அவர்கள் தனது ஆணையில் அணிந்திருந்த
LUTON IN HARMONY எனும் பதக்கத்தை கழற்றிஹாட் டு ஹாட் வோக்இன் ஏற்பாட்டாளரான திரு. ஜோகணேஸ் அவர்களுக்கு அணிவித்தார். அத்தோடு நடைபயணத்தி பங்குகொள்ளும் ஏனையவர்களுக்கும் அதேபோன்ற பதக்கங்களை வழங்கி கெளரவித்தார்.

ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து நடந்துவரும் திரு
. யோகணேஸ், திரு. நிமலன், திரு. லோகேஸ்வரன், திரு. சிறீறஞ்சன், திரு. மொறிஸ் ஆகியோருடன் இன்றைய நடைபயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், மூத்தோர் நலன் பேணல் அமைச்சர் திருமதி. பாலாம்பிகை முருகதாஸ் அவர்களும், பிரித்தானிய தமிழர் பேரவையை சேர்ந்த திரு. ஜெயா மாஸ்டர், திரு. வசி, மற்றும் திரு. சுதா, அவர்களும், இணைந்து நடந்து வருகின்றனர்.

லூட்டனில் இருந்து காலை புறப்பட்ட இவர்கள் இன்று சென் ஹோல்பன்ஸ் எனும் இடத்தில் இன்றைய நடைபயணத்தை நிறைவுசெய்து கொண்டு மீண்டும் அங்கிருந்து இறுதி நாளான நாளை
(07-11-2010) ஞாயிறு காலை 9:00 மணிக்கு புறப்பட்டு லண்டன் வெஸ்மினிஸ்டர் பகுதியை மாலை 6:00 மணியளவில் சென்றடையவுள்ளனர்.

பேர்மிங்காம் விக்டோறியா ஸ்குயாரில் ஆரம்பமான இந்த நடைபயணம் இன்று மதியம் 2:00 மணிவரை 86 மைல்களை (142 கிலோ மீற்றர்களை ) தாண்டி தொடர்ந்தும் இன்று அந்தாவது நாளாக நடந்துகொண்டிருக்கின்றனர் என்பதோடு, இதுவரை பல நடைபயணங்கள் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் இந்தஹாட் டு ஹாட் வோக்எனப்படும் நடைபயணமானது வித்தியாசமானதாகவும், போர்வீரர்களை நினைவுகூர்ந்து (தமிழீழ விடுதலைக்காக போராடிய வீரர்களை நினைவுகூர்ந்து) அவர்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாகவும் தமிழர்களால் நடாத்தப்படும் முதலாவது நடைபயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதி நாளான நாளை லண்டன் வெஸ்மினிஸ்ரர் பகுதியில் நிறைவடையவுள்ள இந்த நடைபயணத்தை வரவேற்கவும்
, அங்கு இடம்பெறவுள்ள இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளவும் பிரித்தானிய பிரதமரின் காரியாலயமான இலக்கம் 10 டவுனிங்க் ஸ்றீட்டில் உநாளை (07-11-2010) மாலை 6:00 மணிக்கு பிரித்தானியத் தமிழர்களை ஒன்றுகூடுமாறு ஏற்பாட்டாளர்கள். கேட்டுக்கொண்டுள்ளனர்.





0 Responses to ஐந்தாம் நாளில்தொடரும் பிரித்தானிய தமிழர்களின் “ஹாட் டு ஹாட்” நடைபயணம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com