இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடர சில சக்திகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக லங்காதீப சிங்கள பத்திரிகை பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு சர்வதேச நீதிமன்றிலும், பிரிட்டன் நீதிமன்றிலும் போர் குற்றச்சாட்டுக்களை சுமத்த முயற்சிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டத்தரணிகள் குழாமொன்று வழக்குத் தொடர்வான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த முயற்சிகளுக்கு பின்னணியில் இலங்கையைச் சேர்ந்த அரசியல் சக்திகள் பலவும் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
க்ளோபல் தமிழ் போராம் மற்றும் சர்வதேச சட்டத்தரணிகள் சிலர் வழக்குத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.
எதிர்வரும் மாதத்தில் மஹிந்த பிரிட்டன் விஜயம் செய்ய உள்ளதாகவும், இந்த விஜயத்தை இலக்கு வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
பிரிட்டன் சட்டத்திற்கு அமைவாக வெளிநாடொன்றில் போர்க் குற்றம் மேற்கொண்டவர்களை அந்நாட்டில் கைது செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.



0 Responses to இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடர முயற்சிகள்: லங்காதீப