Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ரொறன்ரோ பல்கலைக்கழகம் மிஸ்ஸிசாகா வளாகத்தின்எழுவோம்மாவீரர் தின நிகழ்வு 12 ம் திகதி வெள்ளிக்கிழமை பல்கலைக்கழகத்தின் கனெஃப் மையத்தில் இடம்பெற்றது.

மிகவும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சியாகவும் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் வேற்றினத்து மாணவர்கள் கலந்துகொண்டனர்.

மாலை ஆறு மணி முப்பது நிமிடத்திற்கு கனேடிய தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து தமிழீழக் கொடிக்கீதம் ஒலிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து எமது தாயக விடுதலைக்காக தம்முயிரை வித்தாக்கிய மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியின் முன்னின்று அகவணக்கமும் பின்னர் மலர் வணக்கமும் இடம்பெற்றது.

இதன் பின்னர் பல்கலைக்கழக மாணவர்களின் நெறியாள்கையில் நடனங்கள், பேச்சுக்கள், மற்றும் நாடகங்கள் போன்றவை இடம்பெற்றன.

குறிப்பாகஎழுவோம்என்னும் நாடகம் ஈழத் தமிழினம் அழிவுகளில் இருந்து மீண்டு ஒற்றுமையுடன் எழவேண்டும் என்பதைக் கருப்பொருளாகக் கொண்டிருந்த்து.

இந்த நிகழ்வில் கனடியத் தமிழ் தேசிய மக்கள் அவை உறுப்பினர் நீதன் சான் அவர்கள் சிறப்புரை ஆற்றினர்

இந்நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மாணவர்களின் உணர்வுகள் அவர்கள் தாயக விடுதலையில் கொண்டுள்ள உறுதியைப் பறைசாற்றி நின்றன.

இறுதியில் மாவீர்ர்களின் கனவை நனவாக்க தொடர்ந்து போராவோம் என்ற உறுதிமொழியுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.






0 Responses to கனடா மிஸ்ஸிசாகா மாணவர்கள் முன்னெடுத்த மாவீரர் நாள் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com