Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கார்த்திகைப்பூக்களே! கண்விழியுங்கள்!!

பதிந்தவர்: தம்பியன் 14 November 2010

கார்த்திகை வந்ததென காலம் தெரிந்ததென
பார்த்திருந்தது போதுமென பாரே விழியுமென
ஊரே பாருமென உள்ளம் ஒன்றுசேருமென
கார்திகைப்பு க்களே! கண்விழியுங்கள்!
கார்த்திகை வந்ததெனக் கண்விழியுங்கள்!

நேற்று நடந்ததை நெஞ்சில் சுமந்தவராய்
போற்றிய விடுதலைக்காய் தம்உயிரையேபோக்கி
காற்றிலே கலந்த உயிர்மூச்சுக்களே!-காலமெலாம்
ஏற்றிடும் தீபத்தின் ஒளியில் என்றும் தெரிபவரே!
கார்த்திகைப் பூக்களே! கண்விழியுங்கள்!
கார்த்திகை வந்ததென கண்விழியுங்கள்!

வேற்றுமை எதெற்கு இனிஎம்முள்?
விடுதலையே வேண்டும் எம்மண்ணில்.
காற்றுள்ளபோதினிலே தூற்றிடாது-இனியும்
கண்கிடப்பதில் என்ன ஞாயம்?
ஆற்றிடும் கடமைகள் தமைமறந்து புலத்தில்
ஆதாயம் (பதவி) தேடுவதனால் என்னலாபம்?

தோற்றவர் என்றுமே நாமில்லையே!
தேற்றமே தமிழனின் தமிழ்வாழ்வேயென்று
தொடருங்கள் இடர்கழையும் தமிழனாககூடி
நடவுங்கள் ஜனநாயகவழியினிலேயென்று கூற
கார்திகைப்பு க்களே கண்விழியுங்கள் -இதோ
கார்த்திகை வந்ததென கண்விழியுங்கள்.

நாற்றுநட்டு காத்துநின்று கதிரறுக்க நாம்மறந்தால்
மாற்றான் தனக்கேற்றால்போல் அதை அறுடைசெய்தால்
ஏற்ற எம்விடுதலைக்கு மாற்றாக வேறேதும் நீ ஏற்றேயானால்.
நேற்றிருந்த எம்நிலமும் எம்வாழ்வும் இனிஇழந்தேபோனால்...
கூற்றுவனுக்கிரையாகிப்போன உன்உறவுகள் நிலைஎன்னாவது?
போற்றியகொள்கை மனம் மானம் என்ன தோற்றாபோவது?
வேற்றுமையின்றி ஒற்றுமையாய்நின்று வாதாடி -மண்ணில்
போற்றியவிடுதலையே வேண்டுமெனகூறிட விழியுங்கள்.
கார்த்திகைப்பூக்களே! கண்விழியுங்கள் !கண்விழியுங்கள்!

சேற்றிலே செந்தாமரையாய் காலையிலே
மாற்றில்லா மல்லிகையாய் மாலையிலே
போற்றிடும் தெய்வமாய் மனச்சோலையிலே
ஏற்றிடும் தீபமாய் எங்கும் ஒளிதருகையிலே
எவர் மறந்தார் உங்களை இந்த உலகினிலே!

சீனச்சுவர் மறைக்குமா செங்கதிரோன் ஒளிதனை?
மானத்தமிழன் மறப்பானா மண்ணில் தன்விடுதலையை?
ஈனத்தமிழன் ஓருசிலர் இருக்கும்வரை சிலஇடர்இருக்கும்-இருந்தும்
ஆனவழி நாம் நடந்தால்.....அமையாதுபோமா தமிழனின்வாழ்வு?
கார்த்திகைப்பூக்களே! கண்விழியுங்கள்! கண்விழியுங்கள்!!
காலம்வந்ததென கார்த்திகைவந்ததெனக் கண்விழியுங்கள்!!!

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கார்த்திகைப்பூக்களே! கண்விழியுங்கள்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com