அளவெட்டிப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கி தாக்குதல் காயத்துடன் இன்று (11) மாலை யாழ் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவர் கையிலும், வயிற்றுப் பகுதியிலும் காயமடைந்துள்ளதாகவும், முதலில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த நபர், பின்னர் யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அளவெட்டி பகுதியை சேர்ந்த ஜே ரஞ்சித் என்பவரே படுகாயமடைந்தவராவார், எனினும் இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெறமுடியவில்லை.



0 Responses to யாழ். அளவெட்டிப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் - இளைஞர் காயம்