Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர்கள் புலம்பெயர்ந்துவாழும் ஒவ்வொரு நாடுகளிலும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்கள் நடைபெற்று பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டது போல, இந்தியாவிலும் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என நாடுகடந்த தமிழீழ அரசப்பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவின் இன்பத்தமிழ் வானொலிக்கு வழங்கிய பிரத்தியேகப் நேர்காணலின்போதே உருத்திரகுமாரன் இதனை தெரிவித்தார்.

இந்தியாவுக்கான நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளுக்கான தேர்தலை இந்தியாவிலும் நடத்தக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதால் அதனை நடத்ததுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்நேர்காணலின்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில் ஏற்பட்டுள்ள அரசியல்வெளியை நிரப்புவதற்கான முயற்சியே நாடுகடந்த தமிழீழ அரசு எனவும் அதன் பிரதிநிதிகள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகள் சனநாயகத்தின் பண்பியல்புகளாகவே பார்க்கப்படவேண்டும்.

எனினும் எமது பிரதிநிதிகள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகள் கொள்கை அடிப்படையிலான முரண்பாடுகளாக இருப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

தற்போது தமிழர்களை தாயகத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனோ அல்லது வேறு அமைப்புகளுடனோ வெளிப்படையான உறவுநிலையை பேணமுடியாது.

எனினும் தாயகத்தில் உள்ளவர்களினதும் புலத்தில் உள்ளவர்களினதும் இலக்கு ஒன்றாக இருக்கும்போது தனித்தனியாகவே அந்த இலக்கை நோக்கி நகரமுடியும்.

என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

1 Response to இந்தியாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்கள்: உருத்திரகுமாரன்

  1. whatever happened in the past is past.we must look in to the future.we must concentrate on geo- politics nature. and must to ensure that in long term who are our friend , in what way he can help to rebuild our goal and most important is welfare of our people,and who are our enemy.

    Before 1950's there was no nation called Isreil.But to day they are powerful nation. Their lobby is so strong. but where we are?. we must united as a one ,we should have common goal and we should have good
    public relation team.

    kumarasamy, eden.kumarasamy@gmail.com



    we are in deep dark tunnel, go please show the light.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com