அரசாங்கம் கூறுவதுபோன்று சரணடைந்தவர்கள் கொல்லப்படவில்லையென்றால் அவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும். விசாரணைக்கென கூட்டிச்செல்லப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் இன்றுவரை கிடைக்கவில்லை என வடமராட்சியில் நடைபெற்ற ஆணைக்குழுவின் அமர்வுகளில் சாட்சியமளித்த மக்கள் கேள்வி எழுப்பினர்.அரசாங்கம் கூறுவதைப்போன்று சரணடைந்தவர்கள் கொல்லப்படவில்லையென்றால் அவர்கள் எங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும். விசாரணைக்கென கூட்டிச்செல்லப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் இன்றுவரைக்கும் கிடைக்கவில்லை என 2009 காலப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் குடும்பங்கள் ஆணைக்கு முன் சட்சியமளித்துள்ளனர்.
கற்றறிந்த பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் அமர்வுகள் நேற்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் குடத்தனை, நெல்லியடி மற்றும் சாவகச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்றது.
இதன்போது சாட்சியமளிக்கையிலேயே மக்கள் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினர்.
கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் வட்டுவாகல் பகுதியிலும் ஓமந்தை பகுதியிலும் சரணடைந்த போராளிகள் தொடர்பான எந்தத் தகவல்களும் இன்று வரைக்கும் அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் தங்கள் முன்னிலையில் சரணடைந்தார்கள் அல்லது சரணடைந்ததை பார்த்தவர்கள் உள்ளனர். எனினும் இலங்கையில் எந்த முகாமிலும் அவர்களில்லை. அப்படியென்றால் அவர்கள் எங்கே என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.
நேற்றைய சாட்சியத்தில் பத்மநாதன் கமலேஷ்வரி என்பவர் சாட்சியமளிக்கையில் 2009ம் ஆண்டு 5ம் மாதம் 17ம் திகதி இரவு வட்டுவாகலில் எனது கணவர் இராணுவத்தினரிடம் சரணடைந்தார். அவருக்கு ஒரு கால் இல்லை. விசாரணைகள் முடிந்த பின்னர் விடுவிக்கப்படுவார் எனக் கூறியே ஏற்றிச் செல்லப்பட்டார்.
அப்போதுதான் எனது கணவரை நான் இறுதியாக பார்த்தேன். இன்று வரைக்கும் எந்த முடிவுகளும் கூறப்படவில்லை. அவர் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துங்கள் என கண்ணீர் விட்டழுதார்.
இதுவரைக்கும் பதிவு செய்யப்பட்ட வாக்கு மூலங்களில் பெரும்பாலானவை யுத்தத்திற்குப்பின்னர் சரணடைந்த போராளிகள் பற்றிய தகவல்கள் எவையும் தெரிவிக்கப்படாமையும் அவை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதாகவேயிருந்தது.
மேலும் காணமால் போனோர் பற்றிய சாட்சியங்கள் யாழ்.மாவட்டத்தில் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன.



0 Responses to சரணடைந்தவர்கள் கொல்லப்படவில்லையென்றால் அவர்கள் எங்கே?