Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் தமிழர் கட்சியின் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.மதிவாணன் அவர்கள் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கடந்த நான்கு நாட்களாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தினமும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும் நாம் தமிழர் கட்சியினரும் அவரது உடல்நிலையில் கவலைகொண்டு மருத்துவமனையில் இரவுபகலாக இருந்தனர்.

இப்போது திரு.மதிவாணன் அவர்களது உடல் மதுராந்தகத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போன்தூர் கிராமத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறது. அவரது உடல் மாலை 4 மணிக்கு இறுதி மரியாதையுடன் தகனம் செய்யப்படும்.

திரு.மதிவாணன் அவர்கள் சிறந்த மனிதஉரிமை போராளி. அவரது மறைவு தமிழ் சமூகத்திற்கு ஒர் பேரிழப்பு.

தமிழர்கள் அனைவரும் திரு.மதிவாணன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த வாரீர்.

மேலும் அவருக்கு ஏற்ப்பட்ட மருத்துவ செலவிற்கும் அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உதவி செய்ய கீழ் உள்ள நாம் தமிழர் கட்சி வங்கி கணக்கில் செலுத்துக.


வங்கி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank)

கணக்கு பெயர்: NAAM TAMIZHAR KATCHE

(A/C NAME)

கணக்கு எண்: 067302000002501.

(A/C NO)

IFSC எண்: IOBA0000673

(IFS Code)

SHIFT MESSAGE

CENTRAL OFFICE: IOBAINBB001, dealer : IOBAINBB876

கிளை: ராயபுரம். சென்னை. தமிழ்நாடு.

Branch: Royapuram, Chennai, Tamilnadu.


மற்ற மேலதிக விவரங்களுக்கு தொடர்புகொள்க:

மின்னஞ்சல்: donate@naamtamilar.org

தொலைபேசி: ராஜா +91 9380 888 111, ராசீவ்காந்தி + 91 9842 521 338.

0 Responses to நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் மதிவாணன் மறைவு: வீரவணக்கம் செலுத்த வாரீர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com