விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து அண்மையில் கூட வன்னிக்காட்டில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருந்த பெறுமதியான 70 முதிரை மரக்குற்றிகளை அவர்கள் கைப்பற்றியிருந்தனர்.
அரசியல்வாதிகள் மற்றும் அரச ஆதரவு பெற்ற குழுக்கள் மட்டுமன்றி பிரதேசத்தின் பலம் வாய்ந்த நபர்களும் குறித்த சட்டவிரோத நடவடிக்கையில் பங்கு கொண்டிருப்பதாகவும் அத்தகவல் வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
குறுக்கு வழியில் இலட்சக்கணக்கான பணம் சம்பாதிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான காடழிப்பு நடவடிக்கைகள் காரணமாக காட்டு விலங்குகளின் தொல்லையை கிராமப்புற மக்கள் எதிர்கொள்வது மாத்திரமன்றி, அரசாங்கத்துக்குக் கிடைக்க வேண்டிய பெருந்தொகை வருமானமும் இழக்க்பட்டு வருவதாகவும் விசேட அதிரடிப்படையினர் தமிழ் வின்னிடம் சுட்டிக் காட்டுகின்றனர்.
வன்னிக்காடு முழுக்க சட்டவிரோத மரம் அறுக்கும் கருவிகள், உபகரணங்கள் பரந்தளவில் காணப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிசார் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்தாலும், தமக்கு அவ்வாறான அழுத்தங்களுக்கு அடிபணியும் தேவை இல்லை என்பதுடன், தமது கடமைகளில் எந்த அரசியல் வாதியும் தலையிட முடியாத கட்டமைப்பைக் கொண்டிருப்பதன் காரணமாக வன்னியில் இடம் பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளின் போது தமக்குத் தகவல் தரப்படின் அதை உடனடியாக கட்டுப்படுத்தும் வண்ணம் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்றும் வன்னிக்கான விசேட அதிரடிப்படைத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to வன்னியில் தொடரும் காடழிப்பு (படம் இணைப்பு)