முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவை செய்தியாளர்களுடன் பேச அனுமதித்தஜெயிலர் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா இவர், தளபதியாக இருந்த போது, ராணுவதளவாடங்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில்,இவருக்கு 30 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர், வெலிக்கடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மற்ற வழக்குகள் தொடர்பான விசாரணைக்காக,பொன்சேகா சிறையில் இருந்து அடிக்கடி கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுவது வழக்கம். சமீபத்தில்ஒரு நாள், இதுபோல் அவர் கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டார். அப்போது, அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் பேச, அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.இதையடுத்து, இலங்கை அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பொன்சேகாவை, செய்தியாளர்களுக்கு பேச அனுமதி அளித்த ஜெயிலர்டுமிண்டா அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பொன்சேகாவை அழைத்துச்சென்ற சிறைத் துறை வாகனத்தின் டிரைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

0 Responses to பொன்சேகாவை செய்தியாளர்களுடன் பேச அனுமதித்த ஜெயிலர் சஸ்பெண்ட்