சிறிலங்காவில் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளில், புலம் பெயர்ந்த தமிழர்களுடன், சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவும் இணைந்துக் கொண்டுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மைக்காலமாக வெளியாகி வருகின்ற யுத்தக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய காணொலிகளை சான்றாக கொண்ட இந்த அழுத்தம் பிரயோகிக்ப்பட்டு வருவதாக அது தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப்பிரிவில் பணியாற்றி வந்த இசைப்பிரியா, படையினரால் கொடுமையாக கொலை செய்யப்பட்டமை உறுதியாகியுள்ளது
இந்தநிலையில் அனைத்து யுத்தக் குற்றங்கள் தொடர்பிலும் இலங்கை மீது விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
எனினும் யுத்தக் குற்ற விசாரணைகளுக்கான கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வருகின்றது.
எனவே ஐக்கிய நாடுகள் சபை இந்த விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி, பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

0 Responses to சிறிலங்கா போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச அழுத்தங்கள்