Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஒளிக்காட்சிகளில் இசைப்பிரியாவுடன் கொல்லப்பட்டுக் காணப்படும் மற்றைய பெண் போராளியும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் அகல்விழி என்ற இயக்கப் பெயரில் அழைக்கப்பட்டிருந்ததுடன், தமிழீழ தொலைக்காட்சியில் செய்தி சேகரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

அவரது சொந்தப் பெயர் குணலிங்கம் உசாலினி என்று தெரியவருவதுடன் அவர் மல்லாவியில் 1990ம் ஆண்டில் பிறந்துள்ளார். 2008ம் ஆண்டின் மே மாதத்தில் அவரது பெற்றோர் தமது மகளை புலிகள் இயக்கத்தில் சோ்த்துள்ளனர்.

ஆரம்ப காலங்களில் கிளிநொச்சி புலனாய்வுத்துறையில் பணியாற்றிய அவர் கடைசிக்கட்ட போரின் போது இசைப்பிரியாவுடன் இணைந்து ஊடகத்துறையில் பணியாற்றியுள்ளார்.

இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் 2009ம் ஆண்டின் மே மாதம் 18ம் திகதி இசைப்பிரியாவுடன் சோ்த்து அவரும் கொல்லப்பட்டுள்ளார்.

0 Responses to இசைப்பிரியாவுடன் படுகொலை செய்யபட்ட மற்றைய பெண் போராளியும் அடையாளம் காணப்பட்டார் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com