Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவையும், இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும் படுகொலை செய்தமை விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்த மிகப்பெரிய தவறு என்று இலங்கை அமைச்சரும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.

பிராபகரனும் பொட்டும் தான் ராஜிவ் காந்தியை கொலை செய்ய வேண்டும் என்கிற முடிவை எடுத்ததாக தான் கருதுவதாகவும் முரளிதரன் ஆணைக்குழுவின் முன்னர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் ரகசியமான ஒரு அமைப்பு என்றும், அதில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது எனவும் தனது சாட்சியத்தில் அவர் கூறியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின், படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக திங்கட்கிழமை சாட்சியமளித்த அமைச்சர் முரளிதரன், இந்திய இராணுவம் பலரைக் கொன்றதற்காகவும், பல பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதற்காகவுமே விடுதலைப்புலிகள் ராஜிவ் காந்தியை கொல்வது என்று முடிவெடுத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைக் கொண்டே அவர்கள் ராஜிவ் காந்தியை கொன்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

காத்தான்குடியில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் 600 பொலிஸார் மட்டக்களப்பில் கொல்லப்பட்டமை ஆகியவை தொடர்பில் தனக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தனது சகாக்கள் 600 க்கும் அதிகமான பொலிஸாரைக் கொன்றுள்ளார்கள் என்று அவர் ஆணைக்குழுவின் முன்னர் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால் கொலைகள் நடைபெற்ற சமயத்தில் தான் யாழ்ப்பாணத்தில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த கரு(நாய்) தான் அன்று சுவிசில்...

2 Responses to பிரேமதாஸவையும், ராஜிவ் காந்தியையும் படுகொலை செய்தமை மிகப்பெரிய தவறு: கரு(நாய்) (காணொளி இணைப்பு)

  1. Unknown Says:
  2. He is the son of bitch... He has no right to speak abt the death of Rajiv. Rajiv deserves the punishment. We will win Tamil Eelam one day. By then the devils people (Karuna, Karunanidhi, Sonia & family) will be ashamed of it.

     
  3. nais Says:
  4. Dear Brothers
    கருணா என்பவர் மனிதன் என்பதனால் இவ்வாறு பேசுகிறார். மனிதனாக படைக்கப்பட எல்லோருமே இவ்வாறுதான் பேசுவார்கள் இது கருணாவுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் சந்தர்பம் கிடைத்தால்தான் ஒவ்வொரு மனிதனையும் அறிய முடியும்.

    இவன்
    nais-நைஸ்

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com