இலங்கையின் இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணப்பட வேண்டியது அவசியம். அரசாங்கமும் தமிழ்க்கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வினைக் காண முன்வர வேண்டும். இவ் விடயத்தில் இந்தியா, எவ்வித அழுத்தங்களையும் கொடுக்காது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்தார்.
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சரியான தருணம் இதுவேயாகும். 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையிலா? அல்லது அதற்கு மேலான வகையிலா தீர்வினை காண வேண்டும் என்பது இலங்கையைப் பொறுத்த விடயமாகும். இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வின் கீழ் உரிய தீர்வு காணப்பட்டால் அதனை இந்தியா மனப்பூர்வமாக வரவேற்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
புதுடில்லியில் நேற்று பிற்பகல் இலங்கை தேசிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடக பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே சிவ்சங்கர் மேனன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
உலக ஒழுங்குகளுக்கு ஏற்ப எந்தவொரு நாடும் தனித்து இயங்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்தவகையில் இலங்கையுடன் மிகவும் அந்நியோன்ய உறவினை இந்தியா கொண்டுள்ளது. தீர்வு தொடர்பில் எதுவித அழுத்தங்களையும் இந்தியா வழங்காது.
இலங்கை தான் தனது நாட்டு பிரச்சினைக்கு தீர்வினை காணவேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஆலோசனைகளை வழங்க இந்தியா தயாராகவே உள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார அபிவிருத்தி என்பவற்றை காண்பதற்கு இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு முன்வைக்கப்படுவது அவசியமாகும்.
இனப்பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் தீர்வினை முன்வைப்பதா? அல்லது அதற்கு மேலதிகமாக சென்று தீர்வு காண்பதா? என்பது குறித்து இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தவுள்ளதாக தெரிவித்திருந்தார். எனவே இலங்கை அரசாங்கமே இது குறித்து தீர்மானிக்க வேண்டும்.
விடுதலைப்புலிகள் மீளவும் உருவாகும் சந்தர்ப்பம் இருக்கின்றதா என்பது குறித்து கூறுவதற்கில்லை. தற்போதைய சூழலில் அதற்கான சூழ்நிலை இல்லை. இந்த விவகாரம் இலங்கையைப் பொறுத்த விடயமாகும். இந்திய மண்ணில் இலங்கைக்கு எதிராக எந்த சக்தியும் உருவாவதற்கு இந்தியா இடமளிக்க மாட்டாது. என்றார்.

0 Responses to இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இந்தியா எதுவித அழுத்தங்களையும் கொடுக்காது: சிவ்சங்கர் மேனன்