Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய முன்னாள் பிரதம ராஜீவ் காந்தியின் படுகொலைக்குக் காரணமாக இருந்த புலிகளின் முக்கியஸ்தரான கே.பி.யை பாதுகாப்பதுடன் பயங்கரவாதத்தை விரட்டியடித்த பொன்சேகாவை சிறையில் அடைத்து வைத்திருப்பதே மிகப் பெரிய காட்டிக் கொடுப்பாகும் என்று எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்றுக் காலை ஏற்பட்ட சர்ச்சையின் போது அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் சவாலுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

இலங்கைப் படையினரை ஒருபோதும் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். அத்துடன் கரு ஜெயசூரிய யுத்தக் குற்றங்கள் பற்றி எதுவுமே கூறியிருக்கவில்லை. நாம் படையினரை காட்டிக்கொடுக்க தயாராக இல்லை.

எனினும் ராஜீவ் காந்தியின் கொலைக்கு காரணமாக இருந்த கே.பி.யை பாதுகாத்துக் கொண்டு பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டுக் கொடுத்த சரத் பொன்சேகாவை சிறையில் வைத்திருப்பதே மிகப் பெரிய காட்டிக் கொடுப்பு என்றார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யப்பட வேண்டும் என கரு ஜயசூரிய எம்.பி கூறியதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பிலேயே அரசாங்கம் தனது விளக்கத்தை முன் வைத்தது.

கரு தனது பதிலையளித்தார்.

இதனையடுத்து அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அஸ்வர் எம்.பி. ஆகியோர் எழும்பி கருத்து கூறுவதற்கு முயற்சித்தனர். சபாநாயகர் அதற்கு இடமளிக்கவில்லை. எனினும் தனது பெயர் கூறப்பட்டதாக கூறி ரணில் விக்கிரமசிங்க நேரத்தை கேட்டு விளக்கமளித்தார்.

0 Responses to ராஜீவ் கொலை காரணகர்த்தாவான கே.பி.யை பாதுகாப்பதே காட்டிக் கொடுப்பு: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com