இதுவரை 28 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வடக்கிற்கு சுற்றுலாவாக வந்து சென்றிருப்பதாக அண்மையில் படையதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவிற்கு வருகின்ற மக்களின் முக்கிய நோக்கமாக புதுக்குடியிருப்பு மண்ணே பிரதானமாக இருக்கின்றது.அவர்கள் எதுவித வேறுபாடின்றியும் இந்த மண்ணை எடுத்துச் செல்வதில் ஆர்வம் காட்டியதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
தலைவர் பிரபாகரனின் முகாம் எங்கிருந்தது, தலைவர் பிரபாகரன் எங்கு தங்கியிருந்தார் என அம்மக்கள் முல்லைத்தீவுப் பகுதி மக்களை கேட்டு எடுத்துச் செல்வதாகவும் அங்கு வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
வலம்புரி.



0 Responses to புதுக்குடியிருப்பு மண்ணை எடுத்துச் செல்லும் தெற்கு மக்கள் - தலைவர் வாழ்ந்த ஊர் மண்ணாம்!