செட்டிபாளையத்திலுள்ள சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை கர்ப்பவதியாக்கிய குற்றம் தொடர்பில் சந்தேகத்தின் பெரில் 64 வயதான ஓய்வு பெற்ற சுகாதார வைத்தியர் பிரிவில் புத்தக கட்டுனராக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
தும்பங்கேணி திக்கோடையைச் சேர்ந்த 15 வயது சிறுமி திலகவதியார் இல்லத்திலிருந்த வேளை இச்சிறுமியுடன் தகாத முறையில் நடந்தமை காரணமாக குறித்த சிறுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது:
தும்பங்கேணி திக்கோடையைச் சேர்ந்த குறித்த சிறுமி செட்டிபாளையத்தில் கல்வி கற்று வந்துள்ளார். கடந்த 10 ம் மாதம் இவர் குழப்படி அதிகம் என்ற காரணத்தினால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் அவர் தும்பங்கேணியில் பாடசாலைக்குச் சென்று வந்துள்ளார். அப்போது இவருடைய வயிறு பெரிதாக இருப்பது கண்டு வைத்தியரிடம் சோதனை நடத்திய போது இவர் கர்ப்பிணி என்பது தெரிய வந்துள்ளது.
அதனைத் தோடர்டந்து சிறுமியிடம் விசாரித்த வேளை குறித்த சந்தேக நபர் தன்னுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நேற்று முன்தினம் புதன்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிவான் வி. இராமகமலன் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டு எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



0 Responses to சிறுவர் இல்லத்தில் சிறுமி கருத்தரிப்பு: நடந்தேறும் கொடுமைகள்!: மட்டக்களப்பில் சப்பவம்