Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வாரம் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்ட மகிந்த ராஜபக்சவை பேசவிடாமல் திருப்பி அனுப்பப்பட்டமையானதுசந்தேகத்திற்கு இடமின்றிசர்வதேச ரீதியில் சிறிலங்காவுக்கு கிடைத்த பெரிய அடியாகும்.

தனது அரசாங்கத்தின் மீது சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்படும் அழுத்தங்களை புறந்தள்ளியும் தமிழ் மக்களுக்கு தேவையான உரிமைகள் வழங்கப்படுவதை தட்டிக்கழித்தும் காலம் ஓட்டலாம் எனக்கனவு கண்ட மகிந்த ராஜபக்ச, ஒக்ஸ்போட் உரையை சவாலாக சந்தித்து சரித்திரம் படைக்க எண்ணியிருந்தார்.

ஆனால் ஆயிரக்கணக்கில் திரண்ட தமிழ் மக்களின் எதிர்ப்பலைகளை சந்தித்த மகிந்த, சனல் 4 மற்றும் ஏனைய ஊடகங்களால் காத்திருந்து வெளிவிடப்பட்ட போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை கண்டு ஆடிப்போனார்.

தன்னை அல்லது தன்னை சேர்ந்தவர்களுக்கு வலை விரிக்கப்படுகின்றது என்பதை அப்போதுதான் உணர்ந்துகொண்டார் மகிந்த.

ஏறத்தாழ 300 000 தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் பிரித்தானிய தேசத்தில் ஒரு நாட்டின் அதிபர் என்றவகையில் தன்னால் எந்தச்சவாலையும் சந்திக்கமுடியும் என எண்ணிய மகிந்தவிற்கு தன்னையே காப்பாற்றிக்கொள்ளவேண்டிய நிலையை அப்போதுதான் உணர்ந்துகொண்டார்.

பிரித்தானிய பயணம் ஏற்பாடுகள் நடைபெற்றபோதே தடங்கல்கள் ஏற்படத்தொடங்கிவிட்டிருந்தன. பிரித்தானியாவிற்கு செல்வதற்காக 45 பேருடைய கடவுச்சீட்டுக்கள் நுழைவு அனுமதிக்காக சிறிலங்காவிற்கான பிரித்தானிய தூதுவரகத்தில் கையளிக்கப்படடிருந்தன.

ஆனால் குறுகிய காலத்தில் சமர்ப்பிக்கப்பட்டமையால் அவற்றில் 18 பேருடைய கடவுச்சீட்டுக்கள் மீளத்திருப்பிஅனுப்பட்டன. அவற்றை எப்படியாவது சமர்ப்பித்து மறுநாள் விமானத்தில் வருமாறு ஏனையவர்களுக்கு மகிந்த கட்டளை பிறப்பித்திருந்தார்.

ஒக்ஸ்போட் உரை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து தன்னோடு பயணித்த இராணுவத்தரப்பினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என்ற நிலையை உணர்ந்துகொண்டார் மகிந்த. உடனடியாகவே அடுத்த விமானத்தில் அவர்களை சிறிலங்காவுக்கு திரும்புமாறு பணித்தார் மகிந்த. ஆனால் மகிந்த ராஜபக்சவை தனியே விட்டு ஏனையோர் செல்வது நல்லதல்ல ஏனையவர்கள் அறிவுறுத்தினார்கள். இதனால் சிராந்தி ராஜபக்சவை அங்கேயே விட்டு உடனடியாகவே திரும்பமுடிவெடுத்தார் மகிந்த.

சிறிலங்காவுக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகள் சடுதியாக நடைபெறத்தொடங்கிய அதேவேளை பிரித்தானியாவில் வாழும் சிங்களவர்கள் மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்கான நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

அங்கும் வழமைபோல ஒருசில தமிழர்களும் அதில் பங்குகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் தான் ஒரு தமிழன் எனவும் தமிழ்நெற் இணையத்துடன் தொடர்புகளை கொண்டவர் எனவும் கூறினார்.

தனக்கு ஆபத்து எங்கும் இருக்கலாம் என்பதை தெளிவாக உணர்ந்துகொண்ட மகிந்த ராஜபக்ச உடனடியாகவே அவரை வெளியேற்றினார். குறித்த நபர் எவ்வாறு உள்நுழைந்தார் என்பதுபற்றி கவலைகள் அங்கு இருந்தவர்களுக்கு ஏற்பட்டது. தனது தனிப்பட்ட பாதுகாப்புச்சேவையினர் உரியமுறையில் செயற்படவில்லை என கடிந்துகொண்டார்.

முன்னர் பிரேமதாசா கொலைசெய்யப்பட்டதை நினைவுபடுத்திய மகிந்த பரிவாரத்தினர், பலமொகைதீன்களும் பாபுக்களும்இன்னும் மகிந்தவை சுற்றி இருப்பதாக கவலைப்படுகின்றார்கள்.

இதேவேளை விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ரமேஷ் சரணடைந்தபின்னர் சித்திரவதை செய்யப்படுவதை காண்பிக்கு காணொலி வெளிவிடப்பட்டதை விசாரிக்கும் படி ஜிஎல்பீரிசிடம் மகிந்த ராஜபக்ச கூறினார். சரத் பொன்சேகாவின் புலனாய்வுபிரிவைச் சேர்ந்தவர்களே இதனை முன்னர் வைத்திருந்தனர் என இராணுவதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றது.

1 Response to மகிந்தவின் பிரித்தானிய பயணம் – வெளிச்சத்திற்கு வராத தகவல்கள்!

  1. இம் முறை எலி தப்பியிருக்கலாம். இதே அதிஸ்டம் எப்போழுதும் இருக்கும் என்பது என்ன நிச்சயம்.வினை விதைத்தவன் வினை அறுத்துத்தானே ஆகவேண்டும்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com