“ஓங்கி ஒலிக்கும் ஒவ்வொரு குரலும் சிறீலங்கா அரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும்” என்ற தலைப்பில் பிரான்சில் தமிழீழ மக்கள் பேரவை ஒன்றுகூடல் நேற்று 08.12.2010 புதன்கிழமை பி. பகல் 14:00 மணிக்கு சிறீலங்கா அரசின் தூதரகம், மற்றும் பல்வேறு நாட்டு தூதரகங்கள், அமைந்திருக்கும் Place du Paraquay ( Porte Dauphine ) என்னும் இடத்தில் நடைபெற்றது.
பிரான்சு நாட்டின் காலநிலை நேற்றும் இன்றும் மிகவும் மோசமான நிலையிலும், (கடந்த 54 வருடங்களுக்கு பிற்பாடு) பனிகொட்டல்களுக்கு மத்தியிலும் இவ் ஒன்றுகூடல் திட்டமிட்டபடி நடந்தேறியது.
அமைதி வணக்கத்துடன் ஆரம்பமாகிய இவ் ஒன்றுகூடல் மக்கள் ஒன்று பத்தாகி பத்து நூறாகி முன்று மணிநேரம் கடும் குளிருக்கு மத்தியில் பெண்கள், இளையவர்கள், பெரியவர்கள் என எல்லோரும் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டமையும் அங்கே கட்டப்பட்டிருந்த பதாதை மற்றும் மகிந்தவின் உருவப்பொம்மை என்பன பல மக்களின் கவனத்தை கவர்ந்திருந்ததும் பலர் படம் பிடித்து சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது.
இவ் ஒன்றுகூடலில் கலந்து கொண்டவர்கள் தமது பலவிதமான கருத்துக்களை அங்கே பகிர்ந்து கொண்டதும் அவற்றில் சிலரின் கருத்துக்கள் எமது மண்ணில் இதே காலப்பகுதியில் ஈனர்கள் கொத்துக்கொத்தாக எமது மக்களை கொன்றொழிக்க தொடங்கிய போது சர்வதேசத்திடம் எமது இனத்தை காப்பாற்றுமாறு உலகமெங்கும் வாழும் எமது சொந்தகள் உறவுகள் இரவு பகலாக செய்த போராட்டங்களும், அதனால் பயன் எதுவும் எடுபடாமல் போனபோதும், காலம் இன்று எமது பக்கம் கனிந்து வந்திருப்பதுவும், உயிர்களுக்கு மதிப்பளிக்கும் நவீன உலகில் மனித உலகமே வெட்கித்தலை குனியும் வகையில் இரக்கமற்ற படுகொலையை செய்தவர்களும் ஆணையிட்டவர்களும் எம்முன்னால் வந்து போக நாம் அனுமதிக்கலாமா என்றும், இனப்படுகொலையைப் புரிந்தவர்கள் சர்வதேச நீதிமன்றல் ஏற்றி தண்டனை பெற்றுக்கொடுப்பதே இறந்து போன உயிர்களுக்கு செய்யும் உண்மையான நன்றிக்கடனாகும் என்றும். படுகொலை புரியவைத்து 40 ஆயிரம் தமிழ் மக்களின் உயிர் இழப்புக்கு காரணமான சிறீலங்க அரச அதிபர்ரும் அவரது உடன் பிறப்புக்களும், இராணுவத்தினரும் சர்வதேச நாடுகளுக்கு விஐயம் செய்து தாம் செய்த திட்டமிட்ட இனஅழிப்பை நியாயப்படுத்த முற்படுவதையும், அதனை கிடைத்துள்ள அரிய சாட்சிகளை வைத்து சட்டத்தின் முன்னால் நிறுத்த எமது மக்கள் முன்வரவேண்டும் என்ற கருத்து மக்களால் பேசப்பட்டது. இளையோர் இடையே ஓரு ஆவேசத்தை பார்க்கக்கூடியதாக இருந்தது.
தனியே இணையத்தளங்களிலும், துண்டுப்பிரசுங்களிலும், பத்திரிகைகளில் அறிக்கை மட்டும் விட்டுவிட்டு வீட்டில் இருந்து மற்றவர்களை போராட அனுப்பாமல் முழுமையாக அனைத்து மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடவேண்டும் என்றும் பெண்கள் பலர் தெரிவித்திருந்தனர்.
சிங்கள அரசஅதிபரின், தமிழீழ மக்களுக்கு சவால் விட்டுவிட்டு லண்டனுக்கு செய்த பிரயாணாம், அதற்கு எதிராக பிரித்தானியா வாழ் தமிழ்மக்கள் கொழித்து விட்டு எழுந்து மேற்கொண்ட மக்கள் எதிர்போராட்டம் தொடர்ந்தும் தமிழ்மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெறவேண்டும் என்றும், பிரித்தானியா பயணம் தனக்கு தலைகுனிவை ஏற்படுத்தியதாகவும், தற்பொழுது ஜேர்மன் நாட்டில் இருந்து வரும் 57வது படையணியின் தளபதி ஜெகத் டயஸ் ஏற்பாட்டில் சிங்கள அரசஅதிபர் ஜேர்மன் நாட்டுக்கு வருவதற்கு முயற்சி மேற்கொள்வதாகவும் அதனை தடுக்க அங்குவாழ் தமிழ்மக்கள் தயாராகி வருவதையும், அதேபோலவே பிரான்சு நாட்டுக்கு அரச அதிபர் அல்ல ஆளும் அரசில் உள்ளவர்களும் எமது இனத்தின் அழிவுக்கும், படுகொலைக்கும் துணைபோன எவரும் இங்கு விஐயம் செய்ய அனுமதிக்கக்கூடாது, அனுமதிக்க மாட்டார்கள் என்றும் தங்கள் உள்ளக் குமுறல்களை இந்த ஒன்றுகூடல் மூலம் மக்கள் காட்டியுள்ளனர். இதே போராட்டம் வரும் புதன்கிழமையும் நடைபெறும், அதற்குரிய விபரங்கள் அறிவிக்கப்படும் என்று இந்த ஒன்று கூடலை ஏற்பாடு செய்த பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையினர் அறிவித்தனர்.
மே மாதம் 27ம் திகதி 2009யில் இருந்து வாரம்தோறும் புதன்கிழமைகளில் பிரான்சு நாட்டு பாரளுமன்றம் முன்பாக எமது மக்களுக்கு விடுதலை வேண்டியும், நிதி கேட்டும் மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதையும் எமது மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வரை சிறீலங்கா அரசை சர்வதேச மன்றத்திலிருந்து புறக்கணிக்கும் போராட்டம் தொடரும், விடுதலை தீ அணைக்கப்படமாட்டாது என்றும் நாம் தெரிவிக்க விரும்புகிறோம்.
நிகழ்வின் முடிவில் ஆத்திரம் கொண்ட இளைஞர்கள் மகிந்தாவின் உருவத்தை கால்களால் மிதித்தும், தீயிட்டும் கொளுத்தியிருந்தனர்.
17:00 மணிக்கு தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற கோசத்துடன் இன்றைய ஓன்றுகூடல் எழுச்சியாக நிறைவு பெற்றன.
ஊடகப்பிரவு
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை

0 Responses to மகிந்தாவுக்கு எதிராக பிரான்சில் நடைபெற்ற ஒன்றுகூடல் (படங்கள் இணைப்பு)