Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானியாவில் வசித்துவரும் பல தமிழர்கள் தமது உள்ளூர் போலீஸ் நிலையம் சென்று போர்க்குற்றவாளி மஹிந்தராஜபக்ஷவை கைது செய்யுமாறு முறைப்பாடு செய்துள்ளனர்.

லண்டனில் வசித்துவரும் பல தமிழர்கள் தமது உள்ளூர் போலீஸ் நிலையங்களுக்குச் சென்று மகிந்தவால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

இம் முறைப்பாடுகளுக்கு பொலிசால் எதுவும் செய்யமுடியாமல் போனாலும், மக்கள் கொடுக்கும் முறைப்பாடுகளை அவர்கள் கட்டாயம் பதிந்து அதற்கான குற்ற இலக்கத்தை வழங்கவேண்டும்.

எனவே தமிழர்கள் அனைவரும் தமது உள்ளூர் போலீஸ் நிலையங்களுக்குச் சென்று முறைப்பாடுகளை மேற்கொண்டு குற்ற இலக்கத்தை எடுத்துக்கொள்வது நல்லது. தற்போது இலங்கையின் தலைமை அமைச்சர் என்ற பதவியில் அவர் இருப்பதால் பிரித்தானியா அவரைக் கைதுசெய்யவில்லை.

ஆனால் அவர் அப்பதவியில் இருந்து இறங்கும் தறுவாயில் அவரைக் கைதுசெய்யும் உரிமை பிரித்தானிய சட்டத்தில் உள்ளது.

மற்றும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் குற்றவாழியைக் கண்டு பிடிக்கவில்லை என்றால் பிரித்தானியப் பொலிசார் அந்த வழக்கை மூடப்போவது இல்லை. அது தொடர்ந்தும் திறந்த ஒரு வழக்காகவே இருக்கும்.

இக் காரணத்தால் மகிந்த பிரித்தானியா பக்கம் தலைவைத்தே படுக்கமுடியாத நிலை தோன்றலாம். எனவே பொதுமக்கள் விரைந்து செயல்படுங்கள். நீங்கள் கொடுத்த வாக்குமூலத்தை பொலிசார் பிரதியாக எடுத்து உங்களிடம் தருவார்கள். அதனை பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்களிடம் கையளியுங்கள் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

மக்களே தாமத்திகாமல் இன் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். உடனடியாக முறைப்பாடுகளை மேற்கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட அளவுக்கும் மேல் முறைப்பாடுகள் குவியும் காலகட்டத்தில், பிரித்தானிய சட்ட அமைச்சின் உதவிகளை நாட ஏற்பாட்டாளர்கள் முனைகின்றனர்.


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to போர்க்குற்றவாளி மஹிந்தாவை கைது செய்யுங்கள்: பிரித்தானிய பொலிசாரிடம் தமிழர்கள் முறைப்பாடு (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com