Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகிந்த ஒக்ஸ்ஃபேட் பல்கலைக் கழகத்க்தில் பேசாவிட்டாலும் அவர் தங்கியுள்ள விடுதி முன்பு போராட்டம் நடைபெறும் என பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது.

நாளை திட்டமிட்ட வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பிரித்தானிய தமிழர் பேரவையும், மற்றைய தமிழ் அமைப்புகளும் தெரிவித்துள்ளது.

நாளை ஒக்ஸ்ஃபேட் பல்கலைக்கழகத்தில் மகிந்த ஆற்ற இருந்த உரை ரத்துச்செய்யப்பட்டுள்ளது என்று உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியிருப்பது மகிழ்ச்சியே, இருப்பினும் அவர் தங்கியுள்ள டோச்சஸ்டர் விடுதிக்கும் முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் திட்டமிட்ட வையில் நடைபெறும் என தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளது.

மகிந்த இலங்கைக்கு திரும்பி விட்டதாகவும் இதனால் போராட்டங்கள் தேவையில்லை எனவும் சிலர் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பிரான்ஸ், சுவிஸ், மற்றும் இதர நாடுகளில் இருந்து தமிழர்கள் பலர், ஒழுங்குபடுத்தப்பட்ட பேரூந்து மற்றும் கார்களில் பிரித்தானியா நோக்கி வந்துகொண்டு இருக்கின்றனர். அத்தோடு மகிந்த இன்னும் பிரித்தானியாவில் தங்கியிருப்பதாக ஊர்ஜிதமான செய்திகள் கிடைத்துள்ளதோடு, அவர் விடுதிக்கும் பொலிஸ் பாதுகாப்பும் இன்னும் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே பொய்யான பரப்புரைகளை நம்பாது, மக்கள் நாளை ஆர்ப்பாட்டத்தில் பெரும்தொகையாகக் கலந்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுகொள்கின்றனர் ஏற்பாட்டாளர்கள். டோச்சஸ்டர் விடுதிக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்த தேவையான அனுமதியைப் பெறும் முயற்சியில் தற்போது தமிழ் அமைப்புகள் ஈடுபட்டுள்ளதால் இன்னும் சில மணித்தியாலங்களில் சட்டச் சிக்கல் தீர்ந்துவிடும். எனவே நாளை திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடக்கும் என்பதை மக்கள் நன்கு புரிந்துகொள்வர் என்பதில் ஜயமில்லை.

பிரித்தானிய தமிழர்களின் பாரிய போராட்டத்தால் இச்சிறப்புரை ரத்துச் செய்யப்பட்டது என்பது அனைவரும் அறிந்த விடயமே, இருப்பினும் மஹிந்தாவை கைது செய்யக்கோரி நடக்கும் ஆர்ப்பாட்டத்திலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

0 Responses to போர்க்குற்றவாளி மஹிந்த பேசாவிட்டாலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com