Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சுவிஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள சிறீலங்கா தமிழ் மக்களை பின்தொடர்ந்து வருவதாக பாதுகாப்புச் செயலாளருக்கு நெருக்கமானவர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் திவயின செய்தியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

கீர்த்தி வர்ணகுலசூரிய என்ற இந்தச் செய்தியாளர், சுவிஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளவர்களை புலனாய்வுப் பிரிவினர் புகைப்படம் எடுத்துள்ளதாக வார இறுதியில் எழுதிய செய்தியொன்றில் தெரிவித்திருந்தார்.

கீர்த்தி வர்ணகுலசூரிய சுவிஸர்லாந்திலுள்ள சிறீலங்கா தூதரகத்துடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, சிறீலங்காவில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் சுவிற்சலாந்து நாட்டுக்குள் சிறீலங்கா அரசால் அனுப்பப்பட்ட ஊடகவியலாளர்கள் சிலர் சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக செயற்பட்டுவருவதுடன், அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் எழுச்சி போராட்டங்களை திசைதிருப்ப முற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறீலங்காவில் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஊடகவியாலாளர்கள் என்ற போர்வையில் 12 இற்கு மேற்பட்ட கருவாட்டு வியாபாரிகளை சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் சுவிற்சலாந்துக்கு அனுப்ப முற்பட்டது அண்மையில் கண்டறியப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 Responses to சுவிற்சலாந்தில் சிறீலங்கா உளவாளிகள் – தமிழ் சமூகத்தை குறிவைக்கின்றனரா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com