ஈழத்தமிழர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு பயந்து மகிந்த ராஜபக்ஷ அவர்கள் லண்டனில் உள்ள இலங்கை தூதுவராலயம்(Embassy) இல் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
திங்கட்கிழமை பிரித்தானியாவுக்கு வருகைதந்திருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை எதிர்த்து விமான நிலையத்தில் வைத்தே ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர்.
இருப்பினும் பிரித்தானியாவுக்குள் வந்த மஹிந்த ராஜபக்சவின் முக்கிய குறிகோளான ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடாத்தவிருந்த சிறப்புரை நேற்று ரத்துச் செய்யப்பட்டது.
மஹிந்த தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்ட ஐரோப்பியவாழ் தமிழர்களுக்கு பயந்து தற்போது ராஜபக்ஷ லண்டனில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக தெரியவந்திருக்கும் பட்சத்தில், அங்கேயும் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி இருக்கின்றார்கள்.
விடுதிக்கு முன் குவிந்திருந்த மக்கள் இதனை அறிந்து, இலங்கை தூதுவராலயம் நோக்கி தம் பயணத்தினை திசைதிருப்பியுள்ளனர்.
தஞ்சமடைந்திருக்கும் மஹிந்தாவை ஈழத்தமிழர்களிடம் இருந்து பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்புவதற்கு பிரித்தானிய அரசு மிகவும் சிரமத்தினை எதிர்நோக்குவதாகவும், இனிமேல் பிரித்தானியாவுக்கு பயணத்தை மேற்கொள்ளவேண்டாம் என பிரித்தானிய அரசு மகிந்தவுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to லண்டனில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் போர்க்குற்றவாளி மகிந்த தஞ்சம்