கொழும்பு, பம்பலப்பிட்டியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மேஜர் தர இராணுவ அதிகாரி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். அத்துடன் அதில் பயணம் செய்த மேலும் ஐந்து இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.இவர்கள் பயணித்த வாகனம் கடையொன்றிற்குள் புகுந்துவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
காயமடைந்த ஏனைய ஐந்து இராணுவ வீரர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருந்து வைபவம் ஒன்றில் கலந்து விட்டு திரும்பிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. எனினும் சாரதி மதுபோதையில் வாகனத்தை செலுத்தி வந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to பம்பலப்பிட்டியில் வாகனம் விபத்து இராணுவ மேஜர் பலி! ஐந்து வீரர்கள் காயம்