பிரித்தானியாவில் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா சந்தித்த தோல்வியில் இருந்து சிறீலங்கா இன்னும் வெளிவரவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் ஐ.தே.கவின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரியா விடுத்த அறிக்கை தொடர்பில் இன்றும் (08) சிறீலங்கா நாடாளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டதால் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கரு ஜெயசூரியாவின் கருத்து தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் பிரேமஜெயந்தா தெரிவித்ததை தொடர்ந்து அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டதுடன், மீண்டும் சபை கூடியபோது ஏற்பட்ட குழப்பத்தை கண்டு அஞ்சிய சபாநாயகர் சமால் ராஜபக்சா தான் வீடு செல்லப்போவதாக எச்சரிக்கையும் விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to பிரித்தானியா தமிழ் மக்களின் பதிலடி இன்றும் நாடாளுமன்றத்தில் குழப்பம்