Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் மூலமாக தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையுண்டு என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்துகின்றார்.

லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் பின்னணி ஆராயப்பட வேண்டும். அதற்குப் பதிலாக அதனை தாறுமாறாக விமர்சனம் செய்தலாகாது. ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் அவ்வாறு செய்வதன் மூலம் ஜனாதிபதியைச் சந்தோசப்படுத்த முயற்சிக்கின்றார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற தமிழர்களின் ஆர்ப்பாட்டங்கள் போன்ற விடயங்கள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களைத் தூண்டிவிடும் என்று ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் கருத்து வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. தமிழ் அரசியல்வாதிகளின் வாயிலிருந்து அவ்வாறான கருத்துக்கள் வெளிவருவதுதான் சிங்கள மக்கள் மத்தியில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். அதன் ஒரு பிரதிபலிப்புத்தான் குறித்த அரசியல்வாதிகளின் கருத்துக்கள் சிங்கள ஊடகங்களில் தூக்கிப்பிடிக்கப்பட்டு, பெருமளவில் பிரச்சாரப்படுத்துகின்றமையாகும்.

லண்டனில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படை என்னவென்பதை ஆராயாமல் தங்கள் அரசியல் இருப்பைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதை உடனடியாகக் கைவிடவேண்டும்.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு எதிராக அரசாங்க அமைச்சர்களே முன்னின்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதைப் போன்றே இலண்டனிலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் உரிமையுண்டு. அதனை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

எனவே அவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதியை லண்டனுக்கு அழைத்து அவமானப்பட வைத்தவர்கள் மற்றும் அவரது ஒக்ஸ்போர்ட் உரை இரத்துச் செய்யப்பட்டதற்கான காரணங்கள் என்பன குறித்தே விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் ஜனாதிபதியின் உரை இரத்துச் செய்யப்பட்ட விடயம் பாரதூரமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to புலம்பெயர் தமிழர்களுக்கு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள உரிமையுண்டு: மனோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com