மஹிந்தவுடன் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்ட அரசாங்க அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க அங்கு மாறுவேடத்திலேயே உலாவித் திரிந்துள்ளார் என்று நம்பகமான வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
மஹிந்தவுடன் சென்ற குழுவில் அவர் இணைக்கப்பட்டிருந்த போதிலும், அவரோ அதில் ஒட்டாமல் தனியே திரிந்துள்ளார். மஹிந்தவின் எந்தவொரு நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை. மஹிந்தவும் முக்கிய தருணங்களில் எஸ்.பி. திசாநாயக்கவைப் புறக்கணித்திருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
ஒக்ஸ்போர் உரை இரத்துச் செய்யப்பட்ட பின்னர் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகம் மூலமாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களுடனான சந்திப்பிலும் சரி, தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரத்திலும் சரி எஸ்.பி. திசாநாயக்கவுக்கு மஹிந்த அழைப்பு விடுக்கவில்லை.
எனவே தாம் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்த அவர் மாறுவேடத்தில் தனது தனிப்பட்ட பொருட்கொள்வனவு போன்ற விடயங்களை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பியுள்ளார்.

0 Responses to பிரித்தானியாவில் மாறுவேடத்தில் அலைந்த அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க