Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களது வழக்கின் மீதான விசாரணை 6-12-2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது சீமான் அவர்களது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரசேகர் நீதிபதிகள் சொக்கலிங்கம்,சத்தியநாராயணா அவர்கள் முன்னிலையில் சீமான் அவர்களுடைய சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் அவர்கள் இவ்வழக்கின் மீதான விசாரணையை வேறு நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சுக்கு மாற்றக்கோரி தலைமை நீதிபதியிடம் மனு அளித்துள்ளார் என்று கூறி அதன் பிரதியை நீதிபதிகளுக்கு வழங்கினார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

சீமான் அவர்களுடைய சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் அவர்கள் சீமான் அவர்களை கைதை எதிர்த்து தாக்கல் செய்த ஆள் கொணரவு ரிட் மனு கடந்த 4.8.10 அன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, விசாரணைக்காக செப்டம்பர் 21ம் தேதிக்கு பட்டியலிடப்பட்டது.

அப்போதும் விசாரணை நடைபெறவில்லை. அரசு தரப்பில் வாய்தா வாங்கியதை அடுத்து,அந்த வழக்கு அக்டோபர் 22ம் தேதி,நவம்பர் 3,16,25 தேதிகள்,டிசம்பர் 3ம் தேதி என விசாரணை நடைபெறாமல் வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.இந்த வழக்கு வேண்டுமென்றே விசாரிக்கப்படாமால் தள்ளிபோடப்படுகிறது.

எனவே இந்த வழக்கு விசாரணையை வேறு நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சுக்கு மாற்ற வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு சீமான் வழக்கு விசாரணையை வேறு நீதிபதிகளுக்கு மாற்றும் வகையில் தலைமை நீதிபதியிடம் வழக்கை அனுப்ப உத்தரவிட்டனர்.

0 Responses to சீமான் அவர்களது வழக்கு வேறு நீதிபதிகளை கொண்ட பெஞ்சுக்கு மாற்றகோரி நீதிபதியிடம் மனு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com