போர் குற்றச் செயல்களில் ஈடுபடும் இராணுவத்தினர் படுகொலை செய்து புதைக்கும் சடலங்களின் தொகை தற்போது வகை தொகையின்றி பெருகிச் செல்கிறது.
கொல்லப்படுவோரின் எலும்புகளில் இருந்து கொல்லப்பட்டது ஆணா அல்லது பெண்ணா என்பதைக் கண்டறியும் புதிய முப்பரிமாண தொழில் நுட்பத்தை உருவாக்கும் பணியில் அமெரிக்காவின் கரோலினா பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.
பின்புற இடுப்பின் எலும்பில் உள்ள 15 வித்தியாசங்கள் மூலம் இதைக் கண்டறியலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதுதவிர கடந்த இரண்டாம் உலக யுத்த காலத்தில் சுலோவேனியனில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் கொன்று புதைக்கப்பட்ட 700 சடலங்களின் எலும்பும் சேறும் கலந்த பகுதி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பலர் துப்பாக்கியால் சுடப்பட்டும் கோடரியால் கொத்தி கொல்லப்பட்டுமுள்ளனர். இந்தப் புதைகுழிச் சடலங்கள் புதுமுறை பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளன.

0 Responses to படுகொலை செய்து புதைக்கப்பட்டவரை கண்டறிய புதிய தொழில் நுட்பம்