மாவீரர் தினத்தை போற்றும் வகையில் தமிழ் இனத்திற்காக மாவீரரான முத்துக்குமாரின் நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடத்தப்பட்டது அதில் பேராசிரியர் தீரன் ,புகழேந்தி தங்கராசு அண்ணா, முத்துக்குமார் தந்தை குமரேசன்அய்யா ,தடா ராசா,அதியமான் ,அமுதா நம்பி, தங்கராசு ,ஆவல் கணேசன்மற்றும் பெரம்பூர் திலீபன் ராயபுரம் ஆனந்தராஜ் ,மணிகண்டன் திருவள்ளூர் சரவணன்உட்பட பலர் கலந்துகொண்டு ,தங்கசாலை பேருந்து நிலையத்திலிருந்து முழக்கமிட்டவாறே முத்துகுமார் உடல் எரியூட்டப்பட்ட இடம் வரை சென்றனர்.
பின் அங்கு மாவீரர் சுடர் ஏற்றி எல்லோரும் வீரவணக்கம் முழங்கினர்அதனையடுத்து அய்யா குமரேசன் தடா ராசா, அதியமான் ,அமுதா நம்பியும்,தொடந்து பேசிய புகழேந்தி தங்கராசு மாவீரர்களை நினைவுகூர்ந்து பேசிய போது போர்குற்ற விசாரணை துரிதபடுத்துவதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

0 Responses to சென்னையில் மாவீரர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அமைதி பேரணி (காணொளி, படங்கள்)