Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐநா அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைய காயமடைந்த போராளிகளையும் பொதுமக்களையும் காப்பாற்றும் நோக்குடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான ரமேஷ் என்பவர் சிறிலங்கா இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டமை இன்று வெளியிடப்பட்ட இன்னொரு காணொலி மூலம் வெளியாகியுள்ளது.

இவருடன் சரணடைந்த தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் உட்பட பல போராளிகள் பொதுமக்கள் இச்சரணடைதல் முயற்சியின்போது ஏமாற்றப்பட்டு பின்னர் கைதுசெய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டமை பற்றி ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது.


சிறிலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் வெளிவந்துள்ள காணொலி பிரித்தானிய ஊடகங்களில் வெளியிடப்பட்டது. உலகத்தமிழர் பேரவையினரால் முன்னெடுக்கப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இச்சாட்சியங்கள் வெளிக்கொண்டுவரப்படுவதாக பேரவையினர் அறிவித்துள்ளனர்.

இதேவேளை பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்றவிருந்தார். ஆனால் அங்கு தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்து அப்பேச்சு தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தினர் அறிவித்துள்ளனர்.

1 Response to ஐ.நா அறிவுறுத்தலுக்கமைய சரணடைந்த தளபதி ரமேஷ் ஏமாற்றப்பட்டு கொல்லப்பட்டமையை வெளிப்படுத்தும் காணொளி

  1. mahesh Says:
  2. avan varuvan vidai tharuvan...avan varuvan vidai tharuvan...

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com