Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளுள் ஒருவரான் அருளர் எனப்படும் அருட்பிரகாசம் அவர்களது இறுதி நிகழ்வுகள எதிர்வரும் சனிக்கிழமை மடு தேவாலயத்தில் நடைபெறவுள்ளது.

நேற்று காலமான அருளரின் (அருட்பிரகாசம்) உடல் தற்போது இலக்கம் 33, கைலாசபிள்ளையார் வீதியிலுள்ள அவர் வாழ்ந்த வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை அஞ்சலி உரைகளும் வணக்க நிகழ்வும் இடம்பெறுகிறது.

நாளை 05ம் திகதி காலை 7.00 மணிக்கு உடலம் கனகராயன் குளம் எடுத்துச்செல்லப்பட்டு அங்குள்ள மாவீரர் நினைவு இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊரான கன்னாட்டிக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் மடு கோவில் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலத்திற்கு மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

0 Responses to அருட்பிரகாசம் அவர்களது புகழுடல் கனகராயன்குளம் மாவீரர் நினைவு இல்லத்தில் அஞ்சலிக்கு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com