Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அண்மையில் அமெரிக்காவுக்கான தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ திடீரென நாட்டுக்குத் திரும்புவதற்கான காரணமும் இந்த வழக்கு குறித்த பயம் தான் என்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

1991ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்ட நபர்களுக்கெதிரான சித்திவதைகள் மற்றும் துன்புறுத்தல்கள், படுகொலைகளை மேற்கொள்ளும் வெளிநாட்டவர்கள் அமெரிக்கா வரும் பட்சத்தில் கைது செய்வதற்கான அதிகாரம் அந்நாட்டு நீதிமன்றங்களுக்கு உண்டு.

ஜனாதிபதிக்கெதிரான வழக்கும் அந்தப் பிரிவின் கீழ் தொடரப்படுவதால், அமெரிக்க அரசாங்கத்தினால் எதுவிதத் தலையீட்டையும் மேற்கொள்ள முடியாது போய்விடும் என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை முக்கிய அதிகாரிகள் சிலர் வழங்கிய ஆலோசனையின் பிரகாரமே ஜனாதிபதி மஹிந்த உடனடியாக நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி சுதந்திர தினமான பெப்ரவரி நான்காம் திகதிக்கு முந்திய நாள் அதாவது பெப்ரவரி மூன்றாம் திகதியளவிலேயே நாடு திரும்புவதாக முன்னர் உத்தேசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதிக்கெதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கானது வெறுமனே ஊடகப் பரபரப்புக்கான ஒரு ஏமாற்று வித்தை என்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர இன்று தெரிவித்துள்ளார்.

புலிகளின் ஆதரவாளர்கள் பணத்துக்காக இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்ள போதிலும், அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்தப்போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to போர்க்குற்றவாளி மகிந்தவுக்கு எதிராக வழக்கு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com