Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புனித பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் ஆண்டகையைச் சந்திப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த வாரம் வத்திக்கானுக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

வத்திக்கானில் புதின பாப்பரசரைச் சந்திக்கும் ஜனாதிபதி, பாப்பரசரது இலங்கை விஜயத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பினை இதன்போது விடுக்கவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு (2015) ஜனவரி 13ஆம் திகதி புனித பாப்பரசர் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். அதற்கான முன்னேற்பாடுகளை கொழும்பு உயர் மறை மாவட்டம் மேற்கொண்டு வருகிறது. இலங்கைக்கு 13ஆம் திகதி வருகைதரும் புனித பாப்பரசர் பல நிகழ்வுகளில் இங்கு கலந்து கொண்ட பின்னர் 15ஆம் திகதி பிலிப்பைன்சுக்கு விஜயம் மேற்கொள்வார்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷ வத்திக்கான் பயணம்; புனித பாப்பரசரை சந்திக்க ஏற்பாடு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com