Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்புக்கமைய அரசவையின் இரண்டாவது அமர்வின்போது பரிந்துரைக்கப்பட்ட இரு புதிய ஆணையங்களின் உருவாக்கம் பற்றிய விபரங்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இவ்விபரங்கள் எமது உத்தியோகபூர்வ அறிவித்தல்களாக இங்கே தரப்படுகின்றன.

தேர்தல் ஆணையம்

யாப்பில் குறிப்பிட்டபடி நாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவையினால் பரிந்துரைக்கப்பட்டு; பிரதமரின் அலுவலகத்தினால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் ஆணையத்தின் விபரங்கள் பின்வருமாறு:

கீழே குறிப்பிடப்பட்டவர்கள் முதலாவது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

கலாநிதி போல் டொமினிக், (வழக்குரைஞர்) தலைவர்

திரு. N. விஜயசிங்கம் (முன்னைநாள் அரசியல் கட்சி ஆலோசகர்)

திருமதி. செல்வநாயகி சிறீதாஸ் (அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படும் சகல தேர்தல்களுக்கும் யாப்பில் குறிப்பிட்டுள்ளபடி தேர்தல் ஆணையமே முற்றுமுழுதாக பொறுப்பானதாக இருக்கும். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தற்போதைய அரசவையின் உறுப்பினர்கள் தெரிவில் இதுவரை நடைபெறாத தேர்தல்களுக்கும் நடந்தேறிய தேர்தல்கள் பற்றிக் கையிலிருக்கும் முறைப்பாடுகளை ஏற்றுத் தீர்ப்பு வழஙகுவதற்கும் இத்தேர்தல் ஆணையமே பொறுப்பானதாக இருக்கும்.

பொதுமக்கள் எவராயினும் தேர்தல் ஆணையத்தை தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: election.commission@tgte.org

நெறிமுறை ஆணையம்

யாப்பில் குறிப்பிட்டபடி நாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவையினால் பரிந்துரைக்கப்பட்டு அமைச்சரவையினால் உருவாக்கப்பட்ட நெறிமுறை ஆணையத்தின் விபரங்கள் பின்வருமாறு:

கீழே குறிப்பிடப்பட்டவர்கள் முதலாவது நாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவையின் நெறிமுறை ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

பேராசிரியர் முத்துக்குமாரசுவாமி சொர்ணராஜா (மதியுரைக்குழு உறுப்பினர்)

திரு. ஆனந்தர் பூபதி பாலவடிவேற்கரன் (அரசவை உறுப்பினர்)

திரு. கனகேந்திரம் மாணிக்கவாசகர் (அரசவை உறுப்பினர்)

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களின் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மிகச்சிறந்த தரத்தில் பேணுவதன் மூலம் அரசவையின் தரத்தை உயர்நிலையில் தக்கவைப்பதுவே இந் நெறிமுறை ஆணையத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

தெரிவுசெய்யப்பட்ட அரசவை உறுப்பினர் அரசவையின் நலனுக்கு பங்கம் விளைவிப்பார் என தெரியவரும் பட்சத்தில் இது பற்றி நெறிமுறை ஆணையத்திற்கு முறைப்பாடு செய்தல் வேண்டும்.

நெறிமுறை ஆணையம் இது பற்றி விசாரணை செய்து உறுப்பினர் எவரையாது நீக்கம் செய்யவேண்டுமெனக் கருதினால் அந்தப் பரிந்துரை அரசவைத்தலைவர் ஊடாக அரசவைக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும்.

அரசவையின் விவாதத்தின் பின் இப்பரிந்துரை மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசவை உறுப்பினரால் ஏற்றுக் கொள்ளப்படுமிடத்து, அவர் அரசவை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்படுவார்.

பாதிக்கப்பட்ட தரப்பு உட்பட பொதுமக்கள் எவராயினும் அரசவைத்தலைவர் ஊடாக நெறிமுறை ஆணையத்துடன் தொடர்பு கொள்ளலாம். இது விடயமாக அரசவைத்தலைவருடன்

தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி. ethics.commission@tgte.org

விசுவநாதன் ருத்திரகுமாரன்
பிரதமர்

0 Responses to நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையமும், நெறிமுறை ஆணையமும் உருவாக்கம் பெறுகின்றன!: வி.ருத்ரகுமாரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com