Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பதவியில் இருக்கும் வரை இலங்கையில் புத்தாண்டு என்பது யதார்த்தமாகப் போவதில்லை என்று ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திலிருந்து விடுபட்ட இலங்கையானது தற்போதைக்கு அரச பயங்கரவாதத்தின் அடக்குமுறைக்கு உட்பட்டிருப்பதாகவும் சரத் பொன்சேகா மேலும் சுட்டிக் காட்டுகின்றார்.

சிறையிலிருந்தபடியே விடுத்திருக்கும் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் நாட்டின் இன்றைய பயணத்தை தடுத்து நிறுத்துவதாயின், அதற்காகப் பாடுபடும் அனைவருக்கும் தன்னைப் போல் சிறைவாசம் தான் கிட்டும் என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.

ஆயினும் அழகானதொரு நாட்டை, நல்லிணக்கம் கொண்ட சமூகமொன்றை கட்டியெழுப்புவதாயின் அனைத்துவிதமான அடக்குமுறைகளுக்கும் முகம் கொடுத்துப் போராட வேண்டிய கட்டாயத்தை நாட்டு மக்கள் அனைவரும் எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

0 Responses to ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பதவியில் இருக்கும் வரை இலங்கைக்கு புத்தாண்டே கிடையாது: சரத்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com