கடந்த 2009 இறுதி யுத்ததின்போது, புதுமாத்தளான் பகுதியை சற்றும் எதிர்பார்க்காத வகையில் இலங்கை இராணுவம் கைப்பற்றியது. புதுமாத்தளானுக்கு இலங்கை இராணுவம் வருவதற்கு தடையாக மண் அணை ஒன்றுபோடப்பட்டு, அதில் கண்ணிவெடிகள் பல புதைக்கப்பட்டு இருந்தது. இதனை ஒரே நாளில் செய்து முடிப்பது மிகவும் கஷ்டம் என்பதனால், அன்று சோர்வடைந்து, சரியான உணவு கூட உட்கொள்ளாமல் போராடிய போராளிகளை, நாளை அதிகாலை இதனைப் பலப்படுத்தலாம் என தளபதி ஒருவர் கூறியுள்ளார். (அத் தளபதியின் பெயர் வெளியிடப்படவில்லை).
இருப்பினும் அமைக்கப்பட்ட அந்த மண் அணையில் எந்த இடத்தில் கண்ணிவெடிகள் இல்லையோ அந்த இடத்தால் துல்லியாமாக இலங்கை இராணுவத்தினர் ஊடுருவி, புதுமாத்தளானை சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் கைப்பற்றுகின்றனர். அங்கே ஒரு பகுதியில் மட்டும், அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக மருத்துவ மனையில் சுமார் 400 போராளிகள் காயப்பட்ட நிலையில் இருந்திருக்கின்றனர். அவர்களுக்கு என்ன ஆனது என்று இதுவரை தெரியாத நிலை காணப்படுகிறது. ஆனால் தற்போது கிடைக்கப்பெறும் செய்திகளின் அடிப்படையில், காயப்பட்ட போராளிகள் பலரை, இலங்கை இராணுவம் சித்திரவதை செய்து கொலைசெய்துள்ளதாக அறியப்படுகிறது.
தற்போது வெளிநாடு ஒன்றில் இருக்கும் போராளி ஒருவரின் குறிப்பே இவ்வாறு தெரிவிக்கின்றது. அத்தோடு இங்கே இருக்கும் புகைப்படங்கள், புதுமாத்தளானில் இலங்கை இராணுவம் கொலைசெய்த காயப்பட்ட போராளிகள் என அவர் அடையாளம் கண்டுள்ளார். இப் புகைப்படங்களில் காணப்படும், உடலங்களில், காயங்களுக்கான சிகிச்சை செய்யப்பட்டுள்ளதும், பின்னர் அவர்கள் இறந்துகிடப்பது, தெளிவாக உள்ளதோடு, அவர்கள் பாரிய காயங்களுக்கு உட்படவில்லை என்பதும் தெள்ளத்தெளிவாகிறது. சமீபத்தில் ஜ.நாவால் ஏற்படுத்தப்பட்ட நிபுணர்கள் குழுவிற்கும் இவர் தனது நேரடி சாட்சியங்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
இருப்பினும் இத் தகவல்கள் எதனையும், எம்மால் சுயாதீனமக உறுதிசெய்ய முடியவில்லை. இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்ட கால கட்டங்களோ இல்லை அதற்குரிய இடங்களே இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
இச் செய்தி அதிர்விலிருந்து...

naan intha photovaiparkum pothu singala ranuvathai adiyodu alikka vendum entru en ratham kothikkirathu......vazhka tamil