இலங்கையில் நீண்ட போரில் யாருமே வெற்றி பெறவில்லை. மாறாக, அநீதியே நிகழ்ந்தது என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளில் மேலும் ஒரு தொகுதியாக 201.3 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் கூறியுள்ளதாவது, “போரில் மஹிந்த ராஜபக்ஷேவோ, தமிழ் மக்களோ, சிங்கள மக்களோ வெற்றி பெறவில்லை. போரில் அநீதியே நிகழ்ந்தது. தற்போது சமாதானம் நிலவுகின்றது. அந்த சமாதானம் தொடர அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எம்மிடம் கூறியிருக்கின்றார்கள். மக்களின் காணிகளை மக்களிடமே கையளிக்குமாறு. அவற்றை நடைமுறைபடுத்த நாங்கள் உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் உள்ளோம்.
நீங்கள் இந்த பூமிக்கு சொந்தகாரர். இலங்கை உங்கள் சொந்த பூமி. நீங்கள் பிறந்த வளர்ந்த பூமி. அதனை கட்டாயம் உங்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும். அதன் பின்னரே நல்ல சமாதானம் நிலவும்.
இன மத குல பேதமின்றி ஒரு தாயின் பிள்ளைகள் மாதிரி நாங்கள் இருக்க வேண்டும். இலங்கை தாய்க்கு நாங்கள் பாரமில்லை. நான் சிறுவயதில் ஒரு பாட்டு படித்தேன், "மண்ணுக்கு மரம் பாரமா , மரத்திற்கு இலை பாரமா, குலைக்கு காய் பாரமா, தாய்க்கு பிள்ளை பாரமா" என்று ஒரு பாடல். அதேபோன்று இலங்கை தாய்க்கு தமிழ் மக்கள் பாரமில்லை.
நீங்களும் நாங்களும் என எல்லோரும் சேர்ந்து நல்லதை செய்ய வேண்டும். அதற்கு நல்ல சிந்தனை வேண்டும். நல்ல சிந்தனை நெஞ்சில் இருந்தால் எந்நேரமும் நல்லதையே செய்வோம். ” என்றுள்ளார்.

0 Responses to போரில் யாரும் வெற்றி பெறவில்லை; அநீதியே நிகழ்ந்தது: ரெஜினோல்ட் குரே