யாழ்ப்பாணத்தில் ‘அம்மல் பண்பாடு’ என்ற சொல்லாடல் பற்றி ஒருமுறை இவ்விடத்தில் எழுதியபோது பலரும் தொலைபேசியில் தொடர்புகொண்டனர்.
புதுப்புதுக் கலாசாரங்களை அறிமுகம் செய்வது தொடர்பில் போற்றுதலும் தூற்றுதலும் நடந்தன. தூற்றுதல், போற்றுதலை வெற்றி கொண்டதால் ‘அம்மல் பண்பாடு’ போல வேறு பல புதிய பண்பாடுகளை அறிமுகம் செய்வதில் தயக்கம் ஏற்பட்டது.
இதனால் எங்களிடம் இருக்கக் கூடிய கலாசாரங்களையும், பண்பாடுகளையும் கூறலாம். அது பிரச்சினைக்குரியது அல்ல என்ற நினைப்பில், கள்ளுத் தவறணைக் கலாசாரமும், சுடலை ஞானப் பண்பாடும் பற்றி எழுதத் துணிந்தோம். இங்கு சொற்கள் மட்டுமே ஆசாடபூதியாகக் காட்சி தருகின்றன. உள்ளுடல் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
கள்ளுத் தவறணைக்குச் செல்பவர்களை அவதானித்தால் உள்ளே செல்லும் போதும் வெளியே வரும் போதும் அவர்களிடம் இருக்கக் கூடிய துணிச்சல் வித்தியாசமானதாக இருக்கும்.
உள்ளே போகின்றபோது, நாணிக்கோணி ஒரு தவறைச் செய்யும் குற்ற உணர்வோடு தவறணைக்குச் செல்வர். தவறணைக்குச் சென்று பனம் பால் பருகும் வரை அவர்களிடம் கஷ்டம், நஷ்டம், அடக்கம் என்பனவே சிந்தனையில் எழுந்து நிற்கும்.
பெளவியமான பக்குவமும் ஆட்கொள்ளும். பனம் பால் அருந்திய பின் அட! நானே ராஜா! என் போல வீரன் யாரும் உண்டோ என வீறாய்ப்பு எழும். இதன்போது நான் அது செய்தேன். இது செய்தேன் – செய்வேன் என்று பெரும் புகழ் பேசப்படும். அந்த ஊரையே தூக்கி நிமிர்த்துவதாக, நினைப்பும் பேச்சும் அமைந்திருக்கும். முடிவில் எதுவுமில்லை.
ஊர்ப் பகையும் தெருச் சண்டையுமே மிச்சம். சுடலை ஞானம் என்பதும் இது போன்றதுதான். சுடலைக்குப் போகும்போதுதான் ஆளுக்கொரு தேதி வைத்து ஆண்டவன் அழைப்பான். இதுதான் நியதி என்ற ஞானம் ஏற்படும். சுடலையை விட்டு வெளியேறிய பின் அவ்வளவுதான். ஞானம் அகன்று அஞ்ஞானம் ஆட்கொள்ளும்.
இந்த இரண்டு கலாசாரப் பண்பாடுகளும் எங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குச் சாலப் பொருந்தும். அதனால்தான் இன்னமும் எங்கள் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது.
அட! இங்கு போகும் போது ஞானம் பிறக்கிறது. முன் கூறியது போன பிறகு வீரம் பிறக்கிறது. அவ்வளவுதான்.

0 Responses to கள்ளுத் தவறணைக் கலாசாரமும் சுடலை ஞானப் பண்பாடும்