யாழ் குடாநாட்டு மக்கள் உயிரச்சத்துடன் வாழ்ந்து வருவதாக கத்தோலிக்க குருக்கள் சிலரையும், பொதுமக்களின் கருத்துக்களையும் ஆதாரம்காட்டி கத்தோலிக்க இணைய வலையமைப்பான கத்நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களிற்குள் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இளம் பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பாடசாலை மாணவர்கள் 30 பேர் கடத்திச் செல்லப்பட்டமை (இவர்களில் 28 பேர் பின்னர் விடுவிக்கப்பட்டனர்) உட்பட கடத்தல்கள் பல இடம்பெற்றுள்ளன.
போர் முடிவடைந்த பின்னரும் இவ்வாறான வன்முறைகள் தலைதூக்கி இருப்பதையிட்டு தேவாலய பங்குத் தந்தைகள் தமது பங்கிலுள்ள மக்களிற்கு அறிவுறுத்தி அவதானமாக இருக்குமாறு பணித்து வருகின்றனர்.
‘நாங்கள் கடவுளை மன்றாடுகின்றோம். துப்பாக்கிதாரிகள் அடுத்து எங்கே, எப்போது என்ன செய்வார்கள் என்று தெரியாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம்’ - இவ்வாறு கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் பிரதிநிதியான சங்கானையைச் சேர்ந்த ஜயந்தன் இமானுவேல்பிள்ளை தெரிவித்தார். இதே சங்கானையில்தான் இந்து மத குரு ஒருவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டதுடன், அவரது இரண்டு மகன்மார் சுட்டுக் காயப்படுத்தப்பட்டிருந்தனர்.
யாழ் மக்களின் புத்தாண்டு படுகொலைகள், கடத்தல்கள், கொள்ளைகள் என்பவற்றுடனேயே ஆரம்பித்தது. மக்கள் அச்சம் காரணமாக மாலைநேர தேவாலயப் பூசைக்கு செல்லாது, பகலில் அதுவும் கூட்டமாகவே சென்றனர்.
‘எல்லோரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர். கொலைகள், கொள்ளைகளை நிறுத்த உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்’ - இவ்வாறு கூறினார் சென்.ஹென்றி கல்லூரியின் சமய குருவான வணக்கத்திற்குரிய ஜே.ஏ.யேசுதாஸ் அடிகளார்.
படுகொலைச் சம்பங்களை உடனடியாகத் தடுத்து நிறுத்த ஆவன செய்யும்படி யாழ் ஆயரிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருப்பதாகவும், பல உள்ளுர் அரச அதிகாரிகளையும் சந்தித்து இதே கோரிக்கையை முன்வைத்திருப்பதாக, கரித்தாஸ் மனித உரிமைகள் அபிவிருத்தி அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட தலைவர் வணக்கத்திற்குரிய அருளானந்தம் ஜொனாலி யாவிஸ் அடிகளார் தெரிவித்தார்.
யாழ் குடாநாட்டின் உண்மை நிலையைக் கண்டறிய அனைத்துக் கட்சிக் குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 5ஆம் நாள் நாடாளுமன்றத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.
பாதுகாப்பை உறுதி செய்ய தமது அனைத்து நடவடிக்கையையும் எடுக்கும் என சிறீலங்கா அரச அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நேற்று (6ஆம் நாள்) ஊடக சந்திப்பில் தெரிவித்திருக்கின்றார்.
தமிழாக்கம் - பதிவு
நன்றி – கத்நியூஸ்.கொம்

0 Responses to யாழ்மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்: கத்தோலிக்க குருக்கள் கவலை