Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை அவசரமாக செய்யவேண்டிய நிலையிலுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசின் துணைப்பிரதமர் அலுவலகம் - அவுஸ்திரேலியா வெளியிட்டுள்ள நிவாரணப்பணி வேண்டுகோளில் தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையின் முழுவடிவம் வருமாறு:

அவுஸ்திரேலியக் கிளை,
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.
17/01/2011.

வெள்ள அழிவு நிவாரணம்: அவசர வேண்டுகோள்!

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான நிவாரணப்பணித்திட்டத்தில் தமிழ் பேசும் மக்களும் தம்மாலான பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். அண்மையில் ஏற்பட்ட இப்பேரழிவால் குயின்ஸ்லாந்து மாநிலம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியளவில் பொருண்மிய இழப்பு குயின்ஸ்லாந்தில் ஏற்பட்டுள்ளது. இங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணித்திட்டத்தில் தமிழ் பேசும் மக்களும் தம்மை இணைத்துப் பணியாற்றி வருவது பாராட்டத்தக்கது.

இதேவேளை, அண்மையிலேற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட தென்தமிழீழப் பிரதேசங்கள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன. அம்மக்களுக்கான உதவிகள் அவசரமாக தேவையாகவுள்ளன. இயற்கை அனர்த்தத்தால் பெரும் நெருக்கடியில் அம்மக்கள் சிக்கியுள்ளார்கள். அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளான உணவு மற்றும் உடுபுடைவைகள் வழங்கவேண்டிய தேவையுள்ளது.

2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமிப் பேரவலத்தில் சிக்கி பெரும் அழிவைச் சந்தித்த இப்பிரதேச மக்கள் அதன்பின்னர் ஏற்பட்ட பெரும் போர் அழிவினாலும் அனைத்தையும் இழந்திருந்தனர். பின்னர் ஒருவாறு தமது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு முயன்றுவந்தபோது, அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கானது அம்மக்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

இவர்களுக்கான உதவிகளை முன்னுரிமை அளிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையும் நிவாரணப்பணி வேண்டுகோளை விடுத்துள்ளது. அத்துடன் பல்வேறு உள்ளூர் மற்றும் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணி வருவதோடு, வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் சென்றடைவதற்கான அனைத்துலக சமூகத்தின் இயங்குபொறிமுறையினை வேகமாக இயங்க வைப்பதற்கான செயற்பாடுகளைத் தொடர்ச்சியான மேற்கொண்டு வருகிறது.

இதேவேளை அவுஸ்திரேலியத் தமிழ் மக்களையும் பாதிக்கப்பட்ட தமிழீழத் தாயக மக்களுக்கான உதவிப்பணியில் இணைந்துகொள்ளுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றது. தாயகத்தில் வாழும் மக்களின் இந்த அவல நிலையைக் கருத்திற்கொண்டு உங்களாலான உதவியை நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் ஊடாகவும் தமிழ்ச்செயற்பாட்டாளர்கள் ஊடாகவும் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு என்னை 0402960439 என்ற தொலைபேசி எண்ணிலும் அல்லது selva.tgte@yahoo.com.au இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript இயலுமைப்படுத்த வேண்டும் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி.

பேராசிரியர் இளையதம்பி செல்வநாதன்,
உதவிப் பிரதமர்,
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

0 Responses to நா.க.த அரசின் துணைப்பிரதமர் அலுவலகம் - அவுஸ்திரேலியா நிவாரணப்பணி வேண்டுகை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com