கொழும்பில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றுதற்காக வவுனியா மெனிக்பாம் முகாமில் இருந்து பெண்களும் சிறுமியரும் பலவந்தமாக அனுப்பிவைக்கப்படுகின்றனர்.இந்த குற்றச்;சாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சுமத்தியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, 18 பேரும் திங்களன்று 30 பேரும் வவுனியாவில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞாயின்று அனுப்பிவைக்கப்பட்டவர்களில் 18 பேர் பெண்பிள்ளைகளில் 5 பேர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் உள்ள ஆதரவற்ற சிறுவர் இல்லங்களில் இருந்து கல்வி கற்று வருபவர்களாவார்.
தைப்பொங்கலுக்காக மெனிக்பாமில் உள்ள தமது பெற்றோரை பார்க்க வந்தபோதே பலவந்தமாக இந்த சிறுமிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் குறித்த பெண் பிள்ளைகளின் பெற்றோர் தம்முடன் முறையிட்டுள்ளதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.



0 Responses to மெனிக்பாம் இருந்து பெண்கள் பலவந்தமாக கொழும்பு அனுப்பி வைப்பு: சிவசக்தி ஆனந்தன்