Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகிந்தவின் மகன் நாமலுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த சட்டக்கல்லூரி மாணவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டக்கல்லூரியில் பயின்றுவரும் நாமல் ராஜபட்சவுக்கு தேர்வு தினத்துக்கு முன்னதாகவே வினாத்தாள் வழங்கப்பட்டதாக இறுதியாண்டு மாணவர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அவருக்கு வரும் மர்ம தொலைபேசி அழைப்புகளில் அந்த வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டல்கள் வருவதாக சம்பந்தப்பட்ட மாணவர் புகார் கூறியுள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

இதனிடையே, தனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ஒலிப்பதிவு செய்யுமாறு தனியார் செல்போன் நிறுவனத்துக்கு அந்த மாணவர் விடுத்த வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இம் மாணவன் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மகிந்தவின் மகன் நாமலுக்கு எதிராக வழக்குத் தொடுத்தவருக்கு கொலை மிரட்டல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com