Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவின் சோகங்கள் தொடர்கின்றன: சிறீ

பதிந்தவர்: ஈழப்பிரியா 14 January 2011

இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு பிறகு, அங்குள்ள தமிழர்களை பார்த்த போது, அவர்கள் சொல்ல முடியாத துயரத்தில் இருந்தனர். இப்போதும் அதே நிலைமையில் தான் உள்ளனர் என்று வாழும் கலை பயிற்சி நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் குருஜி தெரிவித்துள்ளார்.

பெங்களூரிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கும்பகோணம் வந்த வாழும் கலைபயிற்சி நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் குருஜி சுவாமிமலை கோவிலில் தரிசனம் செயதுவிட்டு, பாபநாசத்தில் உள்ள சிவாலயத்தில் நடந்து வரும் மகா ருத்ர யாகத்தில் கலந்து கொண்டார்.

பின்னர் கும்பகோணம் வந்த அவர் கூறியதாவது,

வாழும் கலை அமைப்பு துவங்கி 30-வது ஆண்டு நடந்து வருகிறது. இதை முன்னிட்டு பாபநாசம் 108 சிவாலயத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து மும்பையில் ஐந்து நாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

வரும் ஜனவரி 22, 23 ஆகிய தேதிகளில் இலங்கையில் 21 ஆயிரம் பேர் தேவாரம் பாடி, பௌத்த மத கோட்பாடுகளை கடை பிடிக்கும் நிகழ்ச்சியும், சென்னையில் 5,500 பேர் ஒரே மேடையில் பங்கேற்கும் நாத வைபவ நிகழ்ச்சியும் நடக்கிறது.

உலக அமைதிக்காக ஜெர்மனி நாடாளுமன்றத்தில் உள்ள ஹிட்லர் அரங்கில் அந்நாட்டு அரசின் ஒத்துழைப்போடு சொற்பொழிவு நடத்தப்படும்.

இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு பிறகு, அங்குள்ள தமிழர்களை பார்த்த போது, அவர்கள் சொல்ல முடியாத துயரத்தில் இருந்தனர். இப்போதும் அதே நிலைமையில் தான் உள்ளனர்.

அவர்களை நான் மீண்டும் சந்தித்து ஆறுதல்படுத்தி, புத்துணர்ச்சி அளித்து, சுய நம்பிக்கை அளிக்க உள்ளேன் என்றார்.

0 Responses to சிறீலங்காவின் சோகங்கள் தொடர்கின்றன: சிறீ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com