Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ். மாவட்டத்தில் 12 கிராம சேவகர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அதற்கான சான்றிதழ் பெறப்பட்டு, அந்த இடங்களில் மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிடம் கோரியுள்ளதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் கூறினார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நண்பகல் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்டத்தில் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றபோதே அரச அதிபர் மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

தெல்லிப்பழை, உடுவில், கோப்பாய், சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 12 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே/150 மாதகல் கிழக்கு, ஜே/154 மாரீசன் கூடல், ஜே/155 இளவாலை, ஜே/ 208 புன்னாலைக்கட்டுவன் வடக்கு, ஜே/ 228 தெல்லிப்பழை, ஜே/ 238 கட்டுவன், ஜே/ 239 கட்டுவன் மேற்கு, ஜே/ 242 குரும்பசிட்டி, ஜே/ 243 குரும்ப சிட்டி கிழக்கு, ஜே/ 244 வயாவிளான் கிழக்கு, ஜே/ 281 பத்தமேனி, ஜே/ 283 இடைக்காடு, ஜே/ 284 வளலாய், ஜே/ 287 அச்சுவேலி மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலேயே கண்ணி வெடிகள் அகற்றப்பட்டமையை உறுதிப்படுத்திய மைக்கான சான்றிதழ் அரச அதிபரிடம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் மீள்குடியேற்றம், கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற குற்றச் செயல்களைத் தடுத்தல், சூரிய கூடத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபிணி வரதலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரக்குமார், சில்வேஸ்திரி அலென்ரின், மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, வடமாகாண ஆளுநர் ஜி..சந்திரசிறி, பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைச் செயலாளர்கள், அரசசார்பற்ற நிறுவனத் தலைவர்கள், கல்வி மற்றும் சகல திணைக்களத் தலைவர்கள், .பி.டி.பி. முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Responses to மீள்குடியமர்வுக்கு தளபதியின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் இமெல்டா சுகுமார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com