யாழ்ப்பாணம் உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பிரதான கட்சிகளால் இன்று தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் ஈபிடிபி கட்சி தாக்கல் செய்த 16 சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெயரை தவறுதலாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எனக் குறிப்பிட்டதனால் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்று யாழ். செயலகத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது இவ்விதமிருக்க.
யாழ். மாநகர சபை முதல்வரின் வாகனம் இன்று அதிகாலையில் விபத்துக்குள்ளாகியது. விபத்து நடந்த போது வாகனத்தில் முதல்வர் இருக்கவில்லை. அவரது கணவரும் செயலாளருமான தலையில் காயமேற்பட்டது. உதவியாளரும் சாரதியும் சிறு காயத்திற்கு உள்ளாகினர்.
கொழும்பில் இருந்து யாழ். நகரை நோக்கி வந்து கொண்டிருந்த போதே வாகனம் விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது. கைதடிப் பாலத்தில் பிரேக் கட்டுப்பாட்டை இழந்து மோதியது என்று தெரிவிக்கப்பட்டது.
அவ்வாகனத்தில் பயணித்த மேயரின் கணவரும் அவரது செயலாளருமான கு.பற்குணராஜா தலையில் காயமடைந்தார். அவரது உதவியாளரும், வாகனச் சாரதியும் சிறு காயங்களுக்குள்ளாகினர்.
வாகனத்ததை நிறுத்த முற்பட்டபோது அது நிறுத்த முடியாது போனதால் இவ்விபத்து ஏற்பட்டதாகச் சாரதி தெரியவருகிறது.

0 Responses to யாழ். உள்ளுராட்சித் தேர்தலில் ஈபிடிபியின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு