Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை மக்களுக்கு அறிவிக்கும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் கனடிய தமிழ் வானொலிக்கு பேட்டி ஒன்றை வழங்கியிருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு கடந்த தமிழீழ அரசுக்கான செயற்பாடுகளுக்கு எந்த தடையும் ஏற்படவில்லை. சுதந்திர தமிழீழத்திற்கு இன்றியமையாதது என்னவெனில் புலத்தில் வாழும் மக்களின் உறுதியான ஆதரவு என இப்புத்தாண்டுச் செய்தியாக புலம்பெயர் மக்களுக்கு கனடிய வானொலியூடாக நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்திருக்கின்றார்.

மேலும், நாடு கடந்த தமிழீழ அரசின் நடவடிக்கைகளுக்கு தாயக மக்களினதும், தமிழக மக்களினதும், உலகவாழ் தமிழ்மக்களினதும் முழுமையான ஆதரவினை எதிர்பார்ப்பதோடு, மலரும் இப்புத்தாண்டில் நம்பிக்கையுடன் நேர்மை வெல்லும் சத்தியம் வெல்லும் தர்மம் வெல்லும் என தெரிவித்துள்ளார்.

0 Responses to ஏன் நாடு கடந்த தமிழீழத்தின் செயற்பாடுகள் போதாது என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com