Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லண்டனில் சிங்களவனின் பண மோசடி

பதிந்தவர்: தம்பியன் 27 January 2011

வைப்புப் பணத்திற்கு அதிகூடிய வட்டி தருவதாக வாக்களித்து லண்டனில் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த சிங்களவர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறுகிய கால வைப்புத் தொகைகளுக்கு நூற்றுக்கு நாற்பத்தி எட்டு வரை உச்ச வட்டி வழங்குவதாகக் கூறி ஆறு போ் கொண்ட குழுவொன்று லண்டனில் ஒரு கோடி பவுண்களை அதாவது நூற்றி எழுபத்தாறு கோடி ரூபாவை மோசடி செய்துள்ளது.

அதன் தலைவராக இலங்கைச் சிங்களவரான விபவ பொன்சேக்கா என்பவர் செயற்பட்டுள்ளார். அவரின் கீழ் இன்னும் இரண்டு இலங்கையரும், ஒரு பாக்கிஸ்தானியரும், இரண்டு வெள்ளையரும் செயற்பட்டுள்ளனர்.

அது மட்டுமன்றி கறுப்புப் பணத்தை சட்டபூர்வமான பணமாக்கிக் கொடுக்கும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கெதிராக வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

லண்டனில் வாழ்ந்த இலங்கையார்களான சமந்த கோரளகே மற்றும் உபுல் டி சொய்ஸா ஆகியோருடன், விபவ பொன்சேக்காவுக்கும் தற்போது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கர்களான வெள்ளையர்கள் இருவருக்கும் எதிராக வழக்கு நிலுவையிலுள்ளது.

0 Responses to லண்டனில் சிங்களவனின் பண மோசடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com