Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அனைத்துலக விதிமுறைகளுக்கு மாறாக தமிழ் மக்கள் மீது யுத்தம் புரிந்த சிறிலங்கா அரசு நடாத்தவிருக்கும் யுத்த மகாநாட்டை புறக்கணிக்குமாறு அனைத்துலக மனிதவுரிமை அமைப்பு விடுத்த கோரிக்கையை வரவேற்று டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள் சார்பாக மனிதவுரிமை அமைப்பிற்கு நன்றி தெரிவித்து டென்மார்க் தமிழர் பேரவை கடிதம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளது.

சிறிலங்கா அரசு தான் புரிந்த இனப்படுகொலையை நியாயப்படுத்துவதற்காக இப்படியான மாகாநாடுகளை நாடாத்திவருகின்றது. காலம் காலமாக தமிழ் மக்கள் சிறிலங்கா அரசால் ஏமாற்றுப்பட்டு வந்துள்ள நிலமையில் இன்று அனைத்துலக மனிதவுரிமை அமைப்பு சிறிலங்கா அரசு கூறும் அரசியல் தீர்வு என்பது முற்றிலும் பொய்யானது எனக்குறிப்பிட்டுள்ளமையானது வரவேற்க வேண்டிய விடயம்.

2002ம் ஆண்டு பேச்சுவார்த்தையில் மன சுத்தியுடன் ஈடுபட்ட தமிழர் பிரதிநிதிகளான தமிழீழவிடுதலைப்புலிகள் சிறிலங்கா அரசு பேச்சுவார்தை முலம் எந்த தீர்வையும் தராது என்பதை புரிந்திரிந்த போதும் சிறலங்கா அரசின் உண்மை முகத்தை அனைத்துலகத்திற்கு காட்டவே தாம் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதாக கூறியிருந்தார்கள்.

மனித உரிமை அமைப்பின் வேண்டுகோளை ஏற்று மனிதவுரிமையை மதிக்கும் நாடுகள் சிறிலங்காவின் மகாநாட்டை புறக்கணிக்கவேண்டும் என நாமும் வேண்டுகின்றோம்.

சிறிலங்கா அரசின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை நசுக்க உதவிய அனைத்துலக நாடுகள் தமிழீழ மக்களின் சுயவுரிமையை அங்கீகரித்து இறைமையுள்ள தமிழீழத்தை மீள அமைப்பதற்கு தமிழ் மக்களுக்கு உதவவேண்டும் எனவும் டென்மார்க் தமிழர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

0 Responses to மனிதவுரிமை அமைப்பின் வேண்டுகோளை வரவேற்கின்றோம்: டென்மார்க் தமிழர் பேரவை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com